Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 24 மே, 2022

ஒருத்தர் எப்பவும் கட்டையோடு சுத்திக்கிட்டு இருந்தாராம். ஏன்?

--------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
--------------------------------------------------
நோயாளி : நர்ஸ்.. ஆபரேஷன் முடிஞ்சி நான் கண் முழிச்ச உடனே என் மனைவியைப் பார்க்கணும்.
நர்ஸ் : கவலைப்படாதீங்க.. கடவுளையே நீங்க பாப்பீங்க!
நோயாளி : 😱😱
--------------------------------------------------
ஆசிரியர் : தமிழ் மொழியை விட அழகான மொழி எது?
மாணவன் : உங்க பொண்ணு தேன் மொழி சார்!
ஆசிரியர் : 😡😡
--------------------------------------------------
முடிஞ்சா இதை கண்டுபிடியுங்கள்..!!
--------------------------------------------------
1. ✌ 👦 👀 

2. 🔪 🌞 👔 

3. ⛰⛰⛰⛰⛰⛰⛰

4. 🚦

விடை :

1. இருமுகன்

2. கத்திச்சண்டை

3. ஏழுமலை

4. சிவப்பு, மஞ்சள், பச்சை
--------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
--------------------------------------------------
💥 அறிவாளி, தன்னில் எதையும் பார்க்கிறான். முட்டாள் எதற்கும் பிறரை எதிர்பார்க்கிறான்.

💥 தன்னைத்தானே சரிசெய்துகொள்ள முயலுங்கள். அதைவிட சிறந்த மாற்றம் வேறொன்றுமில்லை.

💥 ஒரு பூ மலர பல பருவங்களை கடக்கிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை உணர பல தடைகளை கடந்து செல்லுங்கள்.

💥 முயற்சியின் பாதைகள் கடினமானவை, ஆனால், முடிவுகள் இனிமையானவை, தொடர்ந்து முயலுங்கள் கனவுகள் நனவாகும் வரை.

💥 முயற்சி உடையவனுக்கு எட்டு திசையும் ஏற்ற திசைதான்.
--------------------------------------------------
இன்றைய கடி...!!
--------------------------------------------------
🤔 ஒருத்தர் எப்பவும் கட்டையோடு சுத்திக்கிட்டு இருந்தாராம். ஏன்?
.
.
.
.
ஏன்னா அவரு கட்ட பிரம்மச்சாரி.😎😎

🤔 ஒருத்தர் எப்பவும் மத்தவங்க கையை தான் எதிர்பார்த்து இருப்பாரு. ஏன்?
.
.
.
.
ஏன்னா அவரு கைரேகை ஜோதிடராம்.😛😛

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக