இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் ஏசி சர்வீஸிங்கில் தொடங்கி, வீட்டு சேவைகளுக்குள் அமைதியாக அடியெடுத்து வைத்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிளிப்கார்ட் பலகட்டம் முன்னோக்கி வருகிறது
ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்தியாவில் பிரதானமாக இருக்கும் ஆன்லைன் தளங்கள் குறித்து பார்க்கையில், பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகும். இந்த ஆன்லைன் விற்பனை தளங்களுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டிப்போடு சேவைகளை விரிவுப்படுத்தி வருகிறது. அதேபோல் பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது அதன் சேவையை விரிவுப்படுத்துகிறது. இந்தியாவின் உள்நாட்டு இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் பலகட்டம் முன்னோக்கி வருகிறது.
வாங்கப்படும் பொருட்களுக்கான சேவை
பிளிப்கார்ட்டில் வாங்கப்படும் பொருட்களுக்கான சேவையை பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஜீவ்ஸ் செய்து வந்தது. இந்த சேவை பெங்களூரூ மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் நேரலையில் இருக்கிறது. விரைவில் மற்றும் சிறந்த இந்திய நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுப்படுத்தப்படும். பிளிப்கார்ட்டின் வீட்டு சேவைகள் வணிகத்தில் வாஷிங் மெஷின் பழுது உள்ளிட்ட பிற சலுகைகளும் அடங்கும். மின்வணிக தளத்தில் விற்பகப்படும் தயாரிப்பு வகைகளும் இதில் உள்ளடக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
வீட்டு சேவை நிறுவனங்கள் மூடும் நிலை
2016-17 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதியளிப்பு மந்தநிலை காரணமாக பல வீட்டு சேவை நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதன்காரணமாக அர்பன்க்ளாப் எனப்படும் அர்பன் நிறுவனம் தனித்து செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அர்பன் நிறுவனத்துக்கு போட்டியாக பிளிப்கார்ட் களமிறங்கி இருக்கிறது. அர்பன் நிறுவனம் அழகு தொடர்பான சேவைகள் உட்பட நாடு முழுவதும் வீட்டுலேயே சேவைகளை வழங்குபவராக செயல்பட்டு வந்தது. இருப்பினும் பிளிப்கார்ட் அழகு சார்ந்த சேவையில் ஈடுபடாது என தெரிவிக்கப்படுகிறது.
ஏசி, வாஷிங் மெஷின், பர்னிச்சர்
இதுவரை பிளிப்கார்ட் தளத்தில் வாங்கும் ஏசி, வாஷிங் மெஷின், பர்னிச்சர் போன்ற பெரிய உபகரணங்களை வாங்கும் நுகர்வோருக்கு மட்டுமே சேவைகளை ஜீவீஸ் மூலம் வழங்கி வந்தது. இனி நுகர்வோர்கள் நிறுவனத்தின் போட்டி சந்தைகள் உட்பட எங்கிருந்து சாதனங்கள் வாங்கினாலும் ஏசி சேவைக்கான ஆர்டரை புக் செய்யலாம். பிளிப்கார்ட் பல ஆண்டுகளாக இந்த திறன்களை வழிவகுத்து வருவதாகவும் இப்போது நேரடியாக நுகர்வோருக்கு திறந்த விடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மின்னணு பொருட்கள் பழுது, ப்ளம்பரிங், க்ளீனிங் போன்ற பல்வேறு சேவைகளும் இதனுள் அடக்கம். இதன்மூலம் பிளிப்கார்ட் மற்றொரு புதிய வணிகப் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது.
சப்ளை சங்கிலிக்கான உள்கட்டமைப்பு
கடந்தாண்டு பிளிப்கார்ட் நிறுவனம் தங்களது சப்ளை சங்கிலிக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கான சேவை திறனை மேம்படுத்தவும் அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் உடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தது. பிளிப்கார்ட் நிறுவனம் அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் உடன் கூட்டுவைத்து இணைந்து செயல்படும் என அதானி குழுமம் ஒழுங்குமுறை தாக்கலில் தெரிவித்திருந்தது. இந்த கூட்டாட்சியின் ஒரு நடவடிக்கையாக அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் மும்பை நகரில் தளவாட மையம் ஒன்றை அமைக்க உள்ளது. இந்த நடவடிக்கையானது இந்தியாவின் மேற்கு பகுதிகளில் அதிகரித்து வரும் ஆன்லைன் வாடிக்கையாளர்களின் அம்சத்தை பூர்த்தி செய்யும் விதமாக இருக்கும் என கூறப்பட்டது.
அதிகரிக்கும் வேலை வாய்ப்பு
அமைக்கப்பட இருக்கும் இந்த பூர்த்தி மையமானது 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மையத்தின் அம்சமானது அனைத்து சமயத்திலும் 10 மில்லியன் யூனிட் விற்பனையாளர்களின் சரக்குகளை வைத்திருக்கும் திறனோடு இருக்கும் என கூறப்பட்டது. இத்தனை லட்ச சதுரஅடியில் அமைக்கப்படும் பூர்த்தி மையத்தின் மூலம் எம்எஸ்எம்இ மற்றும் விற்பனையாளர்களின் விநியோக சங்கிலி கட்டமைப்பு வலுப்படுத்துவோது மட்டுமின்றி இதன்மூலம் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். இந்த மையத்தின் மூலம் 2500 நேரடி பணியிடமும், ஆயிரக்கணக்கான மறைமுக வேலைகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரந்த கூட்டாண்மையானது தனித்துவமான வணிக மாதிரியை அமைக்கும் எனவும் டிஜிட்டல் தளமான பிளிப்கார்ட்டின் உள்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சிறந்த வாய்ப்பாக கருதுவதாகவும் கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக