>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 24 மே, 2022

    பெற்றோர் பேசிக் கொள்வதில்லை என்றால், அது குழந்தைகளை எந்த அளவுக்கு பாதிக்கும்...

    பண்டைய காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஒரு வீட்டில் கணவன், மனைவி பேசிக் கொள்ளவில்லை என்றால் மற்றவர்கள் சமாதானம் செய்து வைத்து விடுவார்கள். அப்படியே பேசிக் கொள்ளாமல் இருந்தாலும் சித்தப்பா, சித்தி, பெரியப்பா, தாத்தா, பாட்டி என மற்றவர்களுடன் குழந்தைகள் உறவாடும்போது, தங்கள் பெற்றோருக்கு இடையிலான சண்டை, சச்சரவுகள் அவர்களுக்கு தெரியாமல் இருந்தன.

    ஆனால், இன்றைக்கு கூட்டுக் குடும்பங்கள் ‘க்யூட் குடும்பம்’ என்ற அளவில் சிறிய குடும்பமாக மாறிவிட்டது. தாய், தந்தை மற்றும் பிள்ளைகள் மட்டுமே உள்ள சின்ன குடும்பம். இதிலும், காலத்தின் கட்டாய தேவையால் பெற்றோர் இருவருமே வேலைக்கு சென்று விடுகின்றனர்.

    ஆகவே, பெற்றோருக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் என்பது அருகி வருகிறது. அதிலும், சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டுவிட்டால் சொல்லவே வேண்டாம். நீண்டதொரு அமைதி அவர்களிடையே நிலவுகிறது. இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகளும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என்பது தான் சோகமான விஷயமாக இருக்கிறது.

    எவையெல்லாம் தவறான விஷயங்கள்

    குழந்தைகள் முன்னிலையில் தம்பதியர் ஒருவரை, ஒருவர் வசை பாடுவது, ரகசியம் கடைப்பிடிப்பது, மற்றவரை குறை சொல்வது, மிரட்டுவது, பட்டப்பெயர் வைத்து அழைப்பது போன்ற பல விஷயங்கள் தவறானவை ஆகும். இதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம். கடுமையான வேலைப்பளு, தினசரி சோர்வு, போக்குவரத்து நெரிசலில் பயணம் மற்றும் எந்தவொரு விஷயத்தையும் அமைதியாக கையாளத் தெரியாத குணம் போன்றவை காரணங்களாக உள்ளன.

    தகவல் தொடர்பு முக்கியம்

    ஒரு ஆரோக்கியமான குடும்ப வாழ்வுக்கு தகவல் தொடர்பு மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். ஒருவருடன், ஒருவர் பேசுவதும், பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்டு, அதற்கு மதிப்பளிப்பதும் வாழ்க்கையை புரிந்து கொள்ள உதவும்.

    குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கும்:

    கண்ணாடி போல பாதிப்பு

    குழந்தைகள் கண்ணாடி போன்றவர்கள். பெற்றோர் செய்யக் கூடிய தவறுகளால் ஏற்படும் பாதிப்புகள் அப்படியே குழந்தைகளிடமும் பிரதிபலிக்கும்.

    வெளிப்படையான பேச்சு

    பெற்றோர் மற்றும் குழந்தைகள் இடையே முறையான தகவல் தொடர்பு இருக்க வேண்டும். எதிலும் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும்.

    80க்கு 20 விதி

    குழந்தைகளை பேச விடாமல் பெற்றோர் 100 சதவீதம் பேசுகின்றனர். குழந்தைகளை 80 சதவீதம் பேச விட்டு, நாம் 20 சதவீதம் பேச வேண்டும்.

    குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும்

    எந்த நேரமும் வேலை, வெளியிட தொடர்புகள் என்று இருக்காமல், குடும்பத்தில் உள்ள அனைவரோடும் பழகுவதற்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டும்.

    ஒன்றாக உணவு அருந்துவது

    தினசரி ஒருவேளையாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட வேண்டும். மற்றவர்களின் விருப்பங்கள் எதுவென தெரிந்து கொள்ள இது வாய்ப்பாக அமையும்.

    ஆதரவு கொடுக்க வேண்டும்

    குடும்பத்தில் ஒருவருக்கு, ஒருவர் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும். குழந்தைகள் தங்கள் இளம் வயதில் சவால்களை எதிர்கொள்ள இது உதவிகரமாக இருக்கும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக