Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 5 அக்டோபர், 2023

05-10-2023 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்


புரட்டாசி 18 - வியாழக்கிழமை 

🔆 திதி : காலை 10.06 வரை சஷ்டி பின்பு சப்தமி.

🔆 நட்சத்திரம் : முழுவதும் மிருகசீரிஷம்.

🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.04 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம் 

💥 சுவாதி, விசாகம்

பண்டிகை

🌷 சுவாமி மலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

🌷 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்த சாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

🌷 திருக்குற்றாலம், பாபநாசம் இத்தலங்களில் சிவபெருமான் பவனி வரும் காட்சி.

வழிபாடு

🙏 குருமார்களை வழிபட கல்வியில் மேன்மை உண்டாகும்.

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 சாலை பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.

🌟 அபிஷேகம் செய்வதற்கு சிறந்த நாள்.

🌟 ஆபரண பழுது பணிகளை செய்ய உகந்த நாள்.

🌟 கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள நல்ல நாள்.

லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 06.38 PM முதல் 08.21 PM வரை

ரிஷப லக்னம் 08.22 PM முதல் 10.23 PM வரை

மிதுன லக்னம் 10.24 PM முதல் 12.35 AM வரை

கடக லக்னம் 12.36 AM முதல் 02.44 AM வரை 

சிம்ம லக்னம் 02.45 AM முதல் 04.47 AM வரை

கன்னி லக்னம் 04.48 AM முதல் 06.52 AM வரை

துலாம் லக்னம் 06.53 AM முதல் 08.59 AM வரை

விருச்சிக லக்னம் 09.00 AM முதல் 11.11 AM வரை

தனுசு லக்னம் 11.12 AM முதல் 01.18 PM வரை

மகர லக்னம் 01.19 PM முதல் 03.11 PM வரை

கும்ப லக்னம் 03.12 PM முதல் 04.53 PM வரை

மீன லக்னம் 04.54 PM முதல் 06.33 PM வரை
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
 இன்றைய ‌ராசி பலன்கள்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மேஷம்

கடினமான விஷயங்களைச் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளால் மதிப்பு மேம்படும். பூர்வீக பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உடனிருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நிலுவையில் இருந்துவந்த பழைய சரக்குகள் விற்பனையாகும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உங்களின் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


அஸ்வினி : மதிப்பு மேம்படும். 

பரணி : தேவைகள் நிறைவேறும்.

கார்த்திகை : ஆதரவு கிடைக்கும். 
---------------------------------------
ரிஷபம்

நண்பர்களிடத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் வரவுகள் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். பெருமை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் 


கிருத்திகை : மனக்கசப்புகள் நீங்கும். 

ரோகிணி : சிந்தனைகள் அதிகரிக்கும். 

மிருகசீரிஷம் :மதிப்பு மேம்படும்
---------------------------------------
மிதுனம்

முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வர்த்தகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். சக ஊழியர்களிடத்தில் விவேகம் வேண்டும். பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். தவறிய சில வாய்ப்புகளைப் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பாசம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 


மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும். 

திருவாதிரை : விவேகம் வேண்டும். 

புனர்பூசம் : மாற்றம் உண்டாகும். 
---------------------------------------
கடகம்

விடாப்பிடியாகச் செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்பு குறையும். உடல்நலத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். வியாபாரப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுகமான தடைகள் தோன்றி மறையும். அன்பு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும். 

பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.

ஆயில்யம் : தடைகள் மறையும்.
---------------------------------------
சிம்மம்

கொடுத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும். உயர்வு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்


மகம் : ஆதரவான நாள்.

பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

உத்திரம் : ஆரோக்கியம் மேம்படும்.
---------------------------------------
கன்னி

பணிகளில் துரிதம் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் அமையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். சமூகம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்


உத்திரம் : ஆதாயம் ஏற்படும். 

அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.

சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
துலாம்

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். தடைபட்ட பணிகள் முடியும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரப் பணிகளில் நிதானம் வேண்டும். பணி தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதளவில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். இரக்கம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை


சித்திரை : கவனத்துடன் இருக்கவும்.

சுவாதி : நிதானம் வேண்டும். 

விசாகம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும். 
---------------------------------------
விருச்சிகம்

மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பது நல்லது. சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சியின்மை ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


விசாகம் : குழப்பங்கள் மறையும். 

அனுஷம் : போட்டிகள் அதிகரிக்கும். 

கேட்டை : மகிழ்ச்சியின்மை ஏற்படும்.
---------------------------------------
தனுசு

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவுகளின் வழியில் ஆதரவு உண்டாகும். வெளியூரில் இருந்து இன்பமான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்


மூலம் : மகிழ்ச்சியான நாள்.

பூராடம் : சூட்சுமங்களை அறிவீர்கள். 

உத்திராடம் : ஒத்துழைப்பான நாள்.
---------------------------------------
மகரம்

உத்தியோக ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். போட்டிகளில் ஈடுபாடு உண்டாகும். சஞ்சலமான விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தனம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 


உத்திராடம் : பயணங்கள் உண்டாகும். 

திருவோணம் : அனுசரித்துச் செல்லவும். 

அவிட்டம் : தன்னம்பிக்கை மேம்படும்.
---------------------------------------
கும்பம்

குடும்ப வருமானத்தை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களுடன் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புதுவிதமான எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்களிடத்தில் நிதானம் வேண்டும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். இலக்கியப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். கீர்த்தி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


அவிட்டம் : அனுகூலம் உண்டாகும். 

சதயம் : நிதானம் வேண்டும். 

பூரட்டாதி : ஈடுபாடு ஏற்படும்.
---------------------------------------
மீனம்

தாய்வழி உறவுகளிடத்தில் மதிப்பு உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலகலப்பான பேச்சுக்களால் நட்பு வட்டம் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வாகன மாற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். நேர்மை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

 
பூரட்டாதி : மதிப்பு உண்டாகும். 

உத்திரட்டாதி : அன்பு அதிகரிக்கும்.

ரேவதி : அனுசரித்துச் செல்லவும். 
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக