🔆 திதி : அதிகாலை 05.25 வரை திரியோதசி பின்பு சதுர்த்தசி.
🔆 நட்சத்திரம் : இரவு 10.22 வரை ரோகிணி பின்பு மிருகசீரிஷம்.
🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் அமிர்தயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 சித்திரை, சுவாதி
பண்டிகை
🌷 சிதம்பரம் ஸ்ரீசிவபெருமான் தங்க ரதத்தில் காட்சியருளல்.
🌷 மதுரை ஸ்ரீகூடலழகர், காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் ஆகியோருக்கு ராப்பத்து உற்சவம் ஆரம்பம்.
🌷 மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி வாகனத்தில் புறப்பாடு.
🌷 சங்கரநயினார் கோவில் ஸ்ரீசிவபெருமான் தந்த பல்லக்கில் பவனி வரும் காட்சி.
வழிபாடு
🙏 அம்பிகையை வழிபட நன்மைகள் உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் :
💥 கரிநாள்
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 கோயில் மதில் சுவர் கட்டுவதற்கு ஏற்ற நாள்.
🌟 விவசாய பணிகளை செய்ய சிறந்த நாள்.
🌟 புதிய ஆடைகளை அணிவதற்கு சிறந்த நாள்.
🌟 தலைமை பொறுப்புகளை ஏற்பதற்கு நல்ல நாள்.
லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 01.19 PM முதல் 03.03 PM வரை
ரிஷப லக்னம் 03.04 PM முதல் 05.05 PM வரை
மிதுன லக்னம் 05.06 PM முதல் 07.16 PM வரை
கடக லக்னம் 07.17 PM முதல் 09.26 PM வரை
சிம்ம லக்னம் 09.27 PM முதல் 11.29 PM வரை
கன்னி லக்னம் 11.30 PM முதல் 01.30 AM வரை
துலாம் லக்னம் 01.31 AM முதல் 03.37 AM வரை
விருச்சிக லக்னம் 03.38 AM முதல் 05.49 AM வரை
தனுசு லக்னம் 05.50 AM முதல் 08.00 AM வரை
மகர லக்னம் 08.01 AM முதல் 09.53 AM வரை
கும்ப லக்னம் 09.54 AM முதல் 11.35 AM வரை
மீன லக்னம் 11.36 AM முதல் 01.15 PM வரை
▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰
இன்றைய ராசி பலன்கள்
▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰
மேஷம்
உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உடனிருப்பவர்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தித்துச் செயல்பட்டால் நெருக்கடியான சில சூழல்களை தவிர்க்கலாம். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மாறுபட்ட சிந்தனைகளின் மூலம் திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆடம்பரமான சிந்தனைகளை தவிர்க்கவும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சுபகாரிய முயற்சிகளில் விவேகத்துடன் செயல்படவும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : சிந்தனைகளை தவிர்க்கவும்.
மிருகசீரிஷம் : விவேகத்துடன் செயல்படவும்.
---------------------------------------
மிதுனம்
வாக்குறுதி அளிக்கும்பொழுது சிந்தித்துச் செயல்படவும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் அலைச்சல்களும், சில வருத்தங்களும் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிருகசீரிஷம் : சிந்தித்துச் செயல்படவும்.
திருவாதிரை : வெற்றிகரமான நாள்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
கடகம்
சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூசம் : மாற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வாகனம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் சில நுட்பங்களை புரிந்துகொள்வீர்கள். சோர்வு விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மகம் : நெருக்கடிகள் குறையும்.
பூரம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் : நுட்பங்களை அறிவீர்கள்.
---------------------------------------
கன்னி
மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். நீண்ட கால நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சிரமம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : ஆதாயம் ஏற்படும்.
அஸ்தம் : புத்துணர்ச்சியான நாள்.
சித்திரை : முன்னேற்றம் ஏற்படும்.
---------------------------------------
துலாம்
பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். வியாபாரப் பணிகளில் பொறுமையை கையாளவும். எதிர்பார்த்த சில விஷயங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். வாழ்க்கைத் துணைவரிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை
சித்திரை : வாதங்களை குறைத்துக் கொள்ளவும்.
சுவாதி : தாமதம் உண்டாகும்.
விசாகம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
---------------------------------------
விருச்சிகம்
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வேலை நிமிர்த்தமான எண்ணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் விவேகம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : எண்ணங்கள் கைகூடும்.
அனுஷம் : முடிவு கிடைக்கும்.
கேட்டை : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
தனுசு
இழுபறியான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். பணி நிமிர்த்தமான செயல்களில் விவேகம் வேண்டும். வியாபாரத்தில் முதலீடுகள் உயரும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
மூலம் : அனுபவம் ஏற்படும்.
பூராடம் : விவேகம் வேண்டும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
மகரம்
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வாகனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான பேச்சுக்களில் சாதகமான சூழ்நிலைகளை உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
உத்திராடம் : அறிமுகம் ஏற்படும்.
திருவோணம் : தெளிவு பிறக்கும்.
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
கும்பம்
எதிர்பாராத சில உதவிகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகம் நிமிர்த்தமான பயணங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
சதயம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூரட்டாதி : நம்பிக்கை பிறக்கும்.
---------------------------------------
மீனம்
புதுவிதமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரப் பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உறவினர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை
பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.
ரேவதி : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக