இவை செய்வதற்குசிறிது நேரம் பிடித்தாலும் இதனின் செய்முறை மிகவும் சுலபமானது தான். விசேஷ நாட்கள்,பிறந்த நாட்கள், அல்லது விருந்துக்கு உறவினர்கள் வீட்டுக்கு வரும் பட்சத்தில் வழக்கமாகசெய்து பரிமாறப்படும் பிரியாணி மற்றும் ஃப்ரைட் ரைஸ்களுக்கு பதிலாக இந்த உலர் மொச்சை பிரியாணியை பரிமாறி அசத்தலாம்.வாங்க இதை எப்படிசெய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
2 கப் பாசுமதி அரிசி
1 சிட்டிகை மஞ்சள்தூள்
1/2 கப் உலர்ந்த மொச்சைக்கொட்டை ஊறவைக்கவும்
10 சிறிய சதுரவடிவில் நறுக்கிய பிரெட் துண்டுகள்
2 டேபிள் ஸ்பூன் நெய்
4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
உப்பு தேவைக்கேற்ப
அரைக்க
2 தக்காளி
3 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
10 சின்ன வெங்காயம்
1 சிறிய துண்டு இஞ்சி
1/4 கப் கொத்தமல்லித் தழை
🍴செய்முறை 🍽️
முதலில் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றைவிழுதாக அரைக்கவும்.
பாசுமதி அரிசியை கழுவி சுத்தம்செய்து பின் 15 நிமிடம் ஊறவிடவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.
இதில் மூன்றரைகப் நீர் விட்டு உப்பு, மஞ்சள்தூள், அரிசியை சேர்க்கவும். பின்னர் ஊறவைத்த மொச்சைக்கொட்டை சேர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும்.
பின் விசில் அடங்கி ஆவி வெளியேறியதும்,வாணலியில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை வறுத்துச் சேர்க்கவும்.சுவையான உலர் மொச்சைபிரியாணி தயார்..
சமையல் குறிப்புகள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக