Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

ஞாயிறு, 7 ஜனவரி, 2024

07-01-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

மார்கழி 22 - ஞாயிற்றுக்கிழமை

🔆 திதி : இரவு 10.10 வரை ஏகாதசி பின்பு துவாதசி.

🔆 நட்சத்திரம் : இரவு 07.58 வரை விசாகம் பின்பு அனுஷம்.

🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.31 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 ரேவதி, அஸ்வினி 

பண்டிகை

🌷 திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் வாகனத்தில் புறப்பாடு.

🌷 ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் வாகனத்தில் புறப்பாடு.

🌷 திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் வாகனத்தில் புறப்பாடு.

வழிபாடு

🙏 பெருமாளை வழிபட மேன்மை உண்டாகும்.

விரதாதி விசேஷங்கள்:

💥 ஏகாதசி

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 மந்திரம் கற்க சிறந்த நாள்.

🌟 கிணற்றை சீர்படுத்த நல்ல நாள்.

🌟 சிகை அலங்காரம் மேம்படுத்த ஏற்ற நாள்.

🌟 நோய்க்கு மருந்துண்ண உகந்த நாள்.

       ::::::::::::::::::★★★★★★★:::::::::::::::::::::::
லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
       ::::::::::::::::::★★★★★★★:::::::::::::::::::::::

மேஷ லக்னம் 12.28 PM முதல் 02.11 PM வரை 

ரிஷப லக்னம் 02.12 PM முதல் 04.14 PM வரை 

மிதுன லக்னம் 04.15 PM முதல் 06.25 PM வரை 

கடக லக்னம் 06.26 PM முதல் 08.34 PM வரை 

சிம்ம லக்னம் 08.35 PM முதல் 10.37 PM வரை 

கன்னி லக்னம் 10.38 PM முதல் 12.39 AM வரை

துலாம் லக்னம் 12.40 AM முதல் 02.46 AM வரை

விருச்சிக லக்னம் 02.47 AM முதல் 04.57 AM வரை

தனுசு லக்னம் 04.58 AM முதல் 07.08 AM வரை 

மகர லக்னம் 07.09 AM முதல் 09.02 AM வரை 

கும்ப லக்னம் 09.03 AM முதல் 10.44 AM வரை 

மீன லக்னம் 10.45 AM முதல் 12.23 PM வரை
▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰
                 இன்றைய ராசி பலன்கள்
▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰
மேஷம்

உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் அறிமுகம் மேம்படும். காரிய அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசவும். மற்றவருக்கு உதவுவது மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். ஊக்கம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்  

அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரணி : அறிமுகம் மேம்படும்.
கிருத்திகை : திருப்தியான நாள்.
---------------------------------------
ரிஷபம்

நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் அக்கறை வேண்டும். சேமிப்பை மேம்படுத்தும் எண்ணம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை 

கிருத்திகை : லாபம் கிடைக்கும். 
ரோகிணி : முன்னேற்றம் ஏற்படும். 
மிருகசீரிஷம் : அனுபவம் உண்டாகும்.
---------------------------------------
மிதுனம்

பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்களின் ஆதரவுகளால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களின் சந்திப்பு ஏற்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொறுமை வேண்டிய நாள். 


அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு 

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : சந்திப்பு ஏற்படும். 
புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும்.
---------------------------------------
கடகம்

விரும்பிய காரித்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல சந்தர்ப்பம் கைகூடிவரும். தாய் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். முயற்சி மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 

புனர்பூசம் : கலகலப்பான நாள்.
பூசம் : ஒத்துழைப்பு ஏற்படும். 
ஆயில்யம் : லாபம் மேம்படும்.
---------------------------------------
சிம்மம்

 இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆதாயம் தரும் வேலைகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளிவட்டாரத்தில் பாராட்டுகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : ஈடுபாடு உண்டாகும். 
பூரம் : உதவி கிடைக்கும்.
உத்திரம் : பாராட்டுகள் நிறைந்த நாள்.
---------------------------------------
கன்னி

நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். எதிர்க்கருத்து கூறியவர்கள் மனம் மாறுவர்கள். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் விலகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். புதியவர்கள் நட்பால் நன்மை ஏற்படும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

உத்திரம் : தேவைகள் பூர்த்தியாகும்.
அஸ்தம் : பிரச்சனைகள் விலகும். 
சித்திரை : வரவுகள் மேம்படும்.
---------------------------------------
துலாம்

விமர்சன கருத்துகளை தவிர்க்கவும். வரன்கள் உறுதியாவதில் தாமதம் உண்டாகும். மறதியால் சிறு சிறு பிரசனைகள் நேரிடும். உடல் நலனில் கவனம் வேண்டும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்யோகத்தில் அலைச்சல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உற்சாகம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை 

சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : அனுகூலம் உண்டாகும். 
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
விருச்சிகம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். சிலரின் சந்திப்புக்களால் மாற்றம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்யும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பம் அகலும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

விசாகம் : மாற்றம் ஏற்படும். 
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : அலைச்சல் அதிகரிக்கும். 
---------------------------------------
தனுசு

ஆரோக்கியம் சீராக இருக்கும். புத்தி சாதூர்யத்தால் சில தடைகளை வெற்றி கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்ட செயலை மாற்றியமைப்பீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். பாசம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மூலம் : வெற்றிகரமான நாள்.
பூராடம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். 
உத்திராடம் : கட்டுப்பாடு வேண்டும். 
---------------------------------------
மகரம்

சமூக பணிகளில் மதிப்பும், மரியாதையும் உயரும். இழுபறியான சில வழக்குகள் முடிவுக்கு வரும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். மறதி குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் 

உத்திராடம் : மரியாதை உயரும். 
திருவோணம் : வரவு மேம்படும்.
அவிட்டம் : முடிவுகளை எடுப்பீர்கள்.
---------------------------------------
கும்பம்

எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன் பாக்கிகளை கனிவாக பேசி வசூலிப்பீர்கள். குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டு நீங்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். அசதிகள் குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும். 
சதயம் : ஒத்துழைப்பான நாள்.
பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.
---------------------------------------
மீனம்

இடமாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். வியாபார வரவுகளில் தாமதம் உண்டாகும். அனுபவம் கிடைக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் 

பூரட்டாதி : அனுபவம் ஏற்படும். 
உத்திரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும்.
ரேவதி : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக