Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 23 மார்ச், 2024

கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000; மத்திய அரசின் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?


பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு தவணையாக ரூ.11,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்கப்படும்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் விண்ணப்பிப்பதன் மூலம் கருவுற்றது முதல் குழந்தை பிறப்பு வரை 3 தவணைகளில் நிதி வழங்கப்படும்.

மேலும், அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் இலவச மருந்துகள் மற்றும் கர்ப காலத்திற்கு முன், பின் மேற்கொள்ளும் பரிசோதனை ஆகிய வசதிகளும் உள்ளது.

☑️ விண்ணப்பிப்பது எப்படி?

✔️ இந்த திட்டத்தில் பயன் பெற pmmvy.wcd.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று குடிமகன் உள்நுழைவு விருப்பத்தை click செய்யவும். பின்னர், ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். அதில் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்தால் ஒரு படிவம் திறக்கப்படும்.

✔️ அவற்றில் கேட்கப்படும் தகவல்களை அளித்துவிட்டு தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். பின்னர் Submit என்ற பட்டனை அலுத்தினால் உங்களுக்கு ஒரு பதிவு எண் கிடைக்கும். 

✔️ பிறகு விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பிறகு நிதிஉதவி உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

✔️ ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள். அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு சென்று பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனா யோஜனா விண்ணப்ப படிவத்தை நிரப்பிவிட்டு, தேவையான ஆவணங்களை இணைக்கவும்.

✔️ அதன் பிறகு உங்களுக்கு ரசீது வழங்கப்படும்.அதை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். ஏனெனில், பணம் வராவிட்டால், ரசீது மூலம் விசாரிக்கலாம்.

☑️ தேவையான ஆவணங்கள்: (Required Documents)

✔️ கர்ப்பிணி பெண்ணின் ஆதார் அட்டை
✔️ குழந்தை பிறப்பு சான்றிதழ்
✔️ முகவரி சான்றிதழ்
வருமான சான்றிதழ்
✔️ சாதி சான்றிதழ்
✔️ பான் கார்டு
✔️ வாங்கி கணக்கு புத்தகம், மொபைல் எண்
✔️ பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 
ஆகியவை பதிவு செய்ய தேவைப்படும்.

☑️ முக்கிய தகுதி (Eligibility): 

இந்த திட்டம் வாயிலாக பலன் பெற விண்ணப்பத்தாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண் வயது 19 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக