Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 22 மார்ச், 2024

22-03-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

பங்குனி 9 - வெள்ளிக்கிழமை

🔆 திதி : காலை 07.16 வரை துவாதசி பின்பு திரியோதசி.

🔆 நட்சத்திரம் : அதிகாலை 03:46 வரை ஆயில்யம் பின்பு மகம்.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 03.46 வரை சித்தயோகம் பின்பு காலை 06.19 வரை அமிர்தயோகம் பின்பு மரணயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம் 

💥 பூராடம்

பண்டிகை

🌷 மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப்பெருமாள் ரத உற்சவம் மற்றும் இரவு சிம்மாசனத்தில் பவனி வரும் காட்சி.

🌷 திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் வெள்ளி மயில் வாகனத்தில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.

🌷 கழுகுமலை ஸ்ரீமுருகப்பெருமான் பவனி வரும் காட்சி.

வழிபாடு

🙏 சிவபெருமானை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.

விரதாதி விசேஷங்கள் :

💥 பிரதோஷம்

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 விரத செயல்களை பூர்த்தி செய்ய நல்ல நாள்.

🌟 ஆபரணங்களை பழுது பார்க்க சிறந்த நாள்.

🌟 சுரங்க பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.

🌟 கிணறு பராமரிப்பு பணிகளை செய்ய உகந்த நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 07.33 AM முதல் 09.17 AM வரை

ரிஷப லக்னம் 09.18 AM முதல் 11.19 AM வரை

மிதுன லக்னம் 11.20 AM முதல் 01.30 PM வரை

கடக லக்னம் 01.31 PM முதல் 03.40 PM வரை 

சிம்ம லக்னம் 03.41 PM முதல் 05.43 PM வரை 

கன்னி லக்னம் 05.44 PM முதல் 07.44 PM வரை

துலாம் லக்னம் 07.45 PM முதல் 09.51 PM வரை

விருச்சிக லக்னம் 09.52 PM முதல் 12.03 AM வரை

தனுசு லக்னம் 12.04 AM முதல் 02.10 AM வரை

மகர லக்னம் 02.11 AM முதல் 04.03 AM வரை

கும்ப லக்னம் 04.04 AM முதல் 05.45 AM வரை

மீன லக்னம் 05.46 AM முதல் 07.29 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
 இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்

விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் அனுகூலமான வாய்ப்பு கிடைக்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் லாபம் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

அஸ்வினி : அனுகூலமான நாள்.
பரணி : விவேகத்துடன் செயல்படவும்.
கிருத்திகை : லாபம் மேம்படும்.
---------------------------------------
ரிஷபம்

மனதளவில் திருப்தி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். சகோதரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவுகள் சாதகமாகும். புதிய வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : திருப்தியான நாள்.
ரோகிணி : தனவரவுகள் சாதகமாகும். 
மிருகசீரிஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
---------------------------------------
மிதுனம்

திறமைக்கான மதிப்பு கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். அமைதியான நடவடிக்கை மாற்றத்தை ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். பணிவு வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

மிருகசீரிஷம் : மதிப்பு கிடைக்கும்.
திருவாதிரை : தேடல் உண்டாகும். 
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
கடகம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகளால் திருப்தி ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

புனர்பூசம் : கலகலப்பான நாள்.
பூசம் : ஆதாயம் ஏற்படும்.
ஆயில்யம் : அனுகூலம் உண்டாகும்.
---------------------------------------
சிம்மம்

மனதில் புதிய வேலை நிமிர்த்தமான சிந்தனை அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. விளையாட்டு தொடர்பான விஷயங்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். சாந்தம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

மகம் : ஆர்வம் உண்டாகும்.
பூரம் : நெருக்கடியான நாள்.
உத்திரம் : நுட்பங்களை அறிவீர்கள்.
---------------------------------------
கன்னி

விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையை கையாளவும். வெளியூர் தொடர்பான கல்வி வாய்ப்புகள் சாதகமாகும். எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதாரம் மேம்படும். வியாபாரத்தில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். மறைமுகமான தடைகளை புரிந்து கொள்வீர்கள். இன்பம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : பொறுமையை கையாளவும்.
அஸ்தம் : பொருளாதாரம் மேம்படும்.
சித்திரை : புரிதல் ஏற்படும். 
---------------------------------------
துலாம்

வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். சமூகம் தொடர்பான பணிகளில் மதிப்பு மேம்படும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு மேம்படும். உதவி கிடைக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு நிறம்

சித்திரை : அமைதி உண்டாகும். 
சுவாதி : மதிப்பு மேம்படும்.
விசாகம் : முடிவு பிறக்கும். 
---------------------------------------
விருச்சிகம்

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். முதலீடு சார்ந்த ஆலோசனை கிடைக்கும். பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அரசு வழியில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். தெளிவு பிறக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : பொறுப்பு மேம்படும்.
---------------------------------------
தனுசு

தொழில் சார்ந்த பயணங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனதில் இறை சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எழுத்து துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வருமான வாய்ப்புகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். மனை தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

மூலம் : எதிர்பார்ப்பு நிறைவேறும். 
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
மகரம்

நிதானமான செயல்களால் நன்மதிப்பு உண்டாகும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரத்தில் மாற்றமான தருணங்கள் உண்டாகும். எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்களால் குழப்பம் உண்டாகும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : மதிப்பு உண்டாகும்.
திருவோணம் : தனவரவுகள் கிடைக்கும்.
அவிட்டம் : அனுபவம் ஏற்படும். 
---------------------------------------
கும்பம்

பேச்சுக்களில் பொறுமை வேண்டும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். உடன் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அசதி விலகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : பொறுமை வேண்டும். 
சதயம் : எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் மறையும்.
---------------------------------------
மீனம்

பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். மனதில் ஆரோக்கியம் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மாற்றம் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. கால்நடை தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். பயம் விலகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

பூரட்டாதி : தீர்வு உண்டாகும். 
உத்திரட்டாதி : விவேகம் வேண்டும்.
ரேவதி : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக