>>
  • கிரேட்டர் நிக்கோபார் – வளர்ச்சி பெயரில் சூழல் பலியா?
  • >>
  • 25 வருட உழைப்புக்கு கிடைத்த பரிசு? AI-க்கு பயிற்சி அளித்த பெண், வேலையை இழந்த சோகம்!
  • >>
  • இந்து மத இறுதிச் சடங்குகளுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் மற்றும் ஆன்மீக காரணங்கள் ஆச்சரியமூட்டுகின்றன.
  • >>
  • ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஷாக் நியூஸ்! 2026 முதல் 3rd-பார்ட்டி ஆப்களுக்கு டாடா? கூகுளின் அதிரடி அப்டேட்!
  • >>
  • Google Pay, PhonePe, Paytm இனி எதுக்கு? – BSNL Pay வருது!
  • >>
  • Gold ETF முதலீடு – முழுமையான வழிகாட்டி (Tamil Long Form Guide 2025)
  • >>
  • 10 மாத கர்ப்பம் சுமக்கும் ரோபோ – சீன விஞ்ஞானிகளின் அதிர்ச்சி கண்டுபிடிப்பு
  • >>
  • பங்கு சந்தை (Stock Market) பற்றிய ஒரு எளிய மற்றும் தெளிவான அறிமுகம்
  • >>
  • UPI இனிமேல் இலவசமா இருக்காது?" – உங்கள் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா வரப்போகுது?
  • >>
  • ₹50,000 முதலீட்டுடன் தொடங்கக்கூடிய 5 தொழில்கள் — Part 2:
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 25 ஏப்ரல், 2024

    25-04-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

    சித்திரை 12 - வியாழக்கிழமை

    🔆 திதி : காலை 06.51 வரை பிரதமை பின்பு துவிதியை.

    🔆 நட்சத்திரம் : அதிகாலை 12.48 வரை சுவாதி பின்பு விசாகம்.

    🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் சித்தயோகம்.

    சந்திராஷ்டம நட்சத்திரம் 

    💥 உத்திரட்டாதி

    பண்டிகை

    🌷 திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் காலை மோகனா அவதாரம், இரவு மைசூர் மண்டபத்தில் கள்ளர் திருக்கோலமாய் காட்சியருளல் மற்றும் புஷ்ப பல்லக்கில் பவனி வரும் காட்சி.

    🌷 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    🌷 திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    வழிபாடு

    🙏 லட்சுமி ஹயக்ரீவரை வழிபட வளமை மேம்படும்.

    எதற்கெல்லாம் சிறப்பு?

    🌟 கிணறு, குளத்தை சீர்படுத்துவதற்கு சிறந்த நாள்.

    🌟 சிகை அலங்காரம் செய்ய ஏற்ற நாள்.

    🌟 நோய்க்கு மருந்துண்ண உகந்த நாள்.

    🌟 நெருப்பு தொடர்பான வேலைகளை செய்ய சிறந்த நாள்.
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::

    மேஷ லக்னம் 05.27 AM முதல் 07.15 AM வரை

    ரிஷப லக்னம் 07.16 AM முதல் 09.18 AM வரை

    மிதுன லக்னம் 09.19 AM முதல் 11.29 AM வரை

    கடக லக்னம் 11.30 AM முதல் 01.38 PM வரை

    சிம்ம லக்னம் 01.39 PM முதல் 03.40 PM வரை

    கன்னி லக்னம் 03.41 PM முதல் 05.40 PM வரை

    துலாம் லக்னம் 05.41 PM முதல் 07.45 PM வரை

    விருச்சிக லக்னம் 07.46 PM முதல் 09.57 PM வரை

    தனுசு லக்னம் 09.58 PM முதல் 12.04 AM வரை

    மகர லக்னம் 12.05 AM முதல் 01.59 AM வரை

    கும்ப லக்னம் 02.00 AM முதல் 03.42 AM வரை

    மீன லக்னம் 03.43 AM முதல் 05.22 AM வரை
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
            இன்றைய ராசி பலன்கள்
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    மேஷம்

    மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். காதணி சார்ந்த பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் நெழிவு, சுழிவுகளை அறிந்து கொள்வீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை ஏற்படும். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். புகழ் நிறைந்த நாள். 


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம் 

    அஸ்வினி : ஆதரவு ஏற்படும்.
    பரணி : நன்மை உண்டாகும்.
    கிருத்திகை : மாற்றமான நாள்.
    ---------------------------------------
    ரிஷபம்

    எதிர்காலம் சார்ந்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட கால முதலீடு தொடர்பான ஆலோசனை கிடைக்கும். தனவரவுகளின் மூலம் தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்துவந்த சலசலப்புகள் மறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் அனுபவம் ஏற்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அமைதி நிறைந்த நாள். 


    அதிர்ஷ்ட திசை : வடக்கு 
    அதிர்ஷ்ட எண் : 9
    அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம் 

    கிருத்திகை : முடிவுகள் பிறக்கும்.
    ரோகிணி : தேவைகள் நிறைவேறும்.
    மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும்.
    ---------------------------------------
    மிதுனம்

    குழந்தைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மனதில் சேமிப்பு சார்ந்த சிந்தனை மேம்படும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். உடன் இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுகம் நிறைந்த நாள். 


    அதிர்ஷ்ட திசை : மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம் 

    மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும்.
    திருவாதிரை : சிந்தனை மேம்படும். 
    புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
    ---------------------------------------
    கடகம்

    திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டாகும். அனுபவமிக்க வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும். நலம் நிறைந்த நாள். 


    அதிர்ஷ்ட திசை : வடக்கு 
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் 

    புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.
    பூசம் : மகிழ்ச்சியான நாள்.
    ஆயில்யம் : பொறுப்பு அதிகரிக்கும்.
    ---------------------------------------
    சிம்மம்

    சொத்து விற்பது, வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் லாபகரமான சூழல் அமையும். புதிய மின்சார பொருட்களை வாங்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களின் வழியில் நன்மை உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். கவலை விலகும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 1
    அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 

    மகம் : லாபகரமான நாள்.
    பூரம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
    உத்திரம் : அனுகூலம் உண்டாகும். 
    ---------------------------------------
    கன்னி

    காப்பீடு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். வாசனை திரவியம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். நண்பர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில சுபச்செலவுகள் உண்டாகும். விவேகமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தனம் நிறைந்த நாள். 


    அதிர்ஷ்ட திசை : மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 2
    அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 

    உத்திரம் : ஆர்வம் உண்டாகும். 
    அஸ்தம் : அனுபவம் கிடைக்கும்.
    சித்திரை : நம்பிக்கை மேம்படும்.
    ---------------------------------------
    துலாம்

    எதிலும் திருப்தி இன்மையான சூழல் அமையும். விமர்சனங்களால் மனதில் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். தற்பெருமை இன்றி செயல்படுவது நல்லது. சுபம் நிறைந்த நாள். 


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 

    சித்திரை : திருப்தி இன்மையான நாள்.
    சுவாதி : சிந்தித்துச் செயல்படவும்.
    விசாகம் : தேடல் உண்டாகும்.
    ---------------------------------------
    விருச்சிகம்

    மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்கள் கருத்துகளுக்கு உண்டான ஆதரவு கிடைக்கும். அரசுப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். மற்றவர்களிடம் குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் படிப்பு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள். 


    அதிர்ஷ்ட திசை : வடக்கு 
    அதிர்ஷ்ட எண் : 9
    அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் 

    விசாகம் : எண்ணங்கள் நிறைவேறும்.
    அனுஷம் : கவனத்துடன் செயல்படவும்.
    கேட்டை : அலைச்சல் ஏற்படும்.
    ---------------------------------------
    தனுசு

    சிந்தனைகளில் புதிய தெளிவுடன் காணப்படுவீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான ஆலோசனை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பாசம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தெற்கு 
    அதிர்ஷ்ட எண் : 7
    அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம் 

    மூலம் : மேன்மை உண்டாகும்.
    பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
    உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
    ---------------------------------------
    மகரம்

    உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 2
    அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் 

    உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.
    திருவோணம் : ஆரோக்கியம் சீராகும். 
    அவிட்டம் : ஒத்துழைப்பு மேம்படும்.
    ---------------------------------------
    கும்பம்

    போட்டி சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் இருந்தால் ஆதாயம் ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களின் மூலம் மதிப்பு மேம்படும். மூத்த சகோதரர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியூர் சார்ந்த பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். நவீன மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். கமிஷன் சார்ந்த செயல்பாடுகளால் தனவரவுகள் மேம்படும். வாகனம் சார்ந்த விஷயத்தில் சிறு சிறு செலவுகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள். 


    அதிர்ஷ்ட திசை : மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் 

    அவிட்டம் : ஆதாயம் ஏற்படும். 
    சதயம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
    பூரட்டாதி : செலவுகள் உண்டாகும். 
    ---------------------------------------
    மீனம்

    தந்தையுடன் அனுசரித்துச் செல்லவும். மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் தோன்றி மறையும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். சக ஊழியர்கள் இடத்தில் சூழ்நிலையறிந்து செயல்படவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள். 


    அதிர்ஷ்ட திசை : வடக்கு
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் 

    பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும். 
    உத்திரட்டாதி : சூழ்நிலையறிந்து செயல்படவும்.
    ரேவதி : அலைச்சல் அதிகரிக்கும்.
    ---------------------------------------

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக