வைகாசி 13 - ஞாயிற்றுக்கிழமை
🔆 திதி : மாலை 06.28 வரை திரிதியை பின்பு சதுர்த்தி.
🔆 நட்சத்திரம் : காலை 11.04 வரை மூலம் பின்பு பூராடம்.
🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 05.51 வரை சித்தயோகம் பின்பு காலை 11.04 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 பரணி, கிருத்திகை
பண்டிகை
🌷 திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரீராஜப் பெருமாள் புதிய வெள்ளி ரதத்தில் பவனி வரும் காட்சி.
🌷 அரியக்குடி ஸ்ரீசீனிவாசப் பெருமாள் தெப்ப உற்சவம்.
வழிபாடு
🙏 விநாயகரை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.
விரதாதி விசேஷங்கள் :
💥சங்கடஹர சதுர்த்தி
💥 சுபமுகூர்த்த தினம்
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 கணிதம் பயிலுவதற்கு சிறந்த நாள்.
🌟 வாகனம் வாங்க உகந்த நாள்.
🌟 கிணறு வெட்ட ஏற்ற நாள்.
🌟 கால்நடைகள் வாங்க நல்ல நாள்.
::::::::::::::::::::::::◤ ◥::::::::::::::::::::::::::::::::::::::
லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
::::::::::::::::::::::::◤ ◥::::::::::::::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 03.26 AM முதல் 05.10 AM வரை
ரிஷப லக்னம் 05.11 AM முதல் 07.16 AM வரை
மிதுன லக்னம் 07.17 AM முதல் 09.28 AM வரை
கடக லக்னம் 09.29 AM முதல் 11.36 AM வரை
சிம்ம லக்னம் 11.37 AM முதல் 01.38 PM வரை
கன்னி லக்னம் 01.39 PM முதல் 03.38 PM வரை
துலாம் லக்னம் 03.39 PM முதல் 05.44 PM வரை
விருச்சிக லக்னம் 05.45 PM முதல் 07.55 PM வரை
தனுசு லக்னம் 07.56 PM முதல் 10.03 PM வரை
மகர லக்னம் 10.04 PM முதல் 11.57 PM வரை
கும்ப லக்னம் 11.58 PM முதல் 01.40 AM வரை
மீன லக்னம் 01.41 AM முதல் 03.21 AM வரை
::::::::::::::::::::::::◤ ◥::::::::::::::::::::::::::::::::::::::
இன்றைய ராசி பலன்கள்
::::::::::::::::::::::::◤ ◥::::::::::::::::::::::::::::::::::::::
மேஷம்
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். கலைப் பணிகளில் அலட்சியங்களுடன் செயல்படுவதை தவிர்க்கவும். சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு வழியில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். பகை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்.
அஸ்வினி : வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.
பரணி : புதுமையான நாள்.
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
ரிஷபம்
இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். குழந்தைகளின் வழியில் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். பங்குதாரர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.
ரோகிணி : ஆதாயம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : செலவுகள் உண்டாகும்.
---------------------------------------
மிதுனம்
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக அமையும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். நவீனப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். தடைகளை முறியடித்து நினைத்த செயலை முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த தாமதங்கள் மறையும். சினம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்.
மிருகசீரிஷம் : அறிமுகம் ஏற்படும்.
திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : தாமதங்கள் மறையும்.
---------------------------------------
கடகம்
உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதை உருத்திய சில கவலைகள் மறையும். குடும்பத்தில் இருந்துவந்த சிக்கல் குறையும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் மறையும். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் காரிய அனுகூலம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
புனர்பூசம் : மதிப்பு கிடைக்கும்.
பூசம் : சிக்கல்கள் குறையும்.
ஆயில்யம் : அனுகூலம் ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தெளிவுகள் பிறக்கும். தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். வீடு, மனை விற்பதில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பெருமை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
மகம் : பக்குவம் உண்டாகும்.
பூரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரம் : தாமதங்கள் விலகும்.
---------------------------------------
கன்னி
புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய வேலைக்கான உதவிகள் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். புத்திரர்களின் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். வெளி வட்டார தொடர்புகள் மேம்படும். கால்நடை பணிகளில் மேன்மை உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : விரயங்கள் ஏற்படும்.
சித்திரை : மேன்மை உண்டாகும்.
---------------------------------------
துலாம்
இழுபறியாக இருந்துவந்த வழக்குகள் சாதகமாக அமையும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். பழைய நினைவுகளால் மனதில் குழப்பம் உண்டாகும். உத்தியோகத்தில் புதுவிதமான சூழல் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
சித்திரை : வழக்குகள் சாதகமாகும்.
சுவாதி : விமர்சனங்கள் நீங்கும்.
விசாகம் : புதுவிதமான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். நண்பர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். மனதளவில் எதிர்காலம் சார்ந்த சில தெளிவான முடிவுகள் பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் சார்ந்த பயணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்நீல நிறம்
விசாகம் : கட்டுப்பாடு வேண்டும்.
அனுஷம் : முடிவுகள் பிறக்கும்.
கேட்டை : ஆலோசனைகள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். செயல்களில் அறிவாற்றல் வெளிப்படும். முக்கியமான விவகாரத்தில் முடிவெடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்.
மூலம் : பயணங்கள் உண்டாகும்.
பூராடம் : ஆதரவான நாள்.
உத்திராடம் : தடுமாற்றம் ஏற்படும்.
---------------------------------------
மகரம்
திட்டமிட்ட சில பணிகளில் தாமதம் உண்டாகும். குழந்தைகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாகன பயணங்களில் மிதவேகம் நல்லது. வேலையாட்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.
உத்திராடம் : தாமதம் உண்டாகும்.
திருவோணம் : விரயங்கள் ஏற்படும்.
அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
கும்பம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
---------------------------------------
மீனம்
மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ரசனை தன்மையில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். இழுபறியாக இருந்துவந்த பணிகள் நிறைவேறும். திடீர் பயணங்களால் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். மக்கள் சேவையில் கவனம் அதிகரிக்கும். நற்செயல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.
உத்திரட்டாதி : தடைகள் விலகும்.
ரேவதி : அனுபவம் கிடைக்கும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக