தேவையான பொருட்கள்:
இட்லி பர்கர்:
இட்லி – 5
வெண்ணெய் – 10 மில்லி
புதினா சட்னி – 100 கிராம்
கேரட் – 50 கிராம்
வெள்ளரிக்காய் – 50 கிராம்
தக்காளி – 50 கிராம்
பெரிய வெங்காயம் – 50 கிராம்
கட்லெட்:
உருளைக்கிழங்கு – 150 கிராம்
கேரட் – 30 கிராம்
பச்சை பட்டாணி – 30 கிராம்
பெரிய வெங்காயம் – 30 கிராம்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ½ டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
முட்டை வெள்ளைக்கரு – 1
பிரட் தூள் – 50 கிராம்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் + பொரிக்க தேவையான அளவு
கட்லெட் தயாரிப்பு:
1. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
2. வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும்,
இஞ்சி-பூண்டு விழுது,
நறுக்கிய வெங்காயம்,
பச்சை மிளகாய்,
கேரட்,
பச்சை பட்டாணி,
கொத்தமல்லித்தழை,
மிளகாய்த்தூள்,
மஞ்சள்தூள்,
கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
3. அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு கிளறி, சூடாக இருக்கும் போது சிறிய உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
4. ஒவ்வொன்றையும் லேசாக அழுத்தி தட்டையாக செய்யவும்.
5. ஒவ்வொரு கட்லட்டையும் முட்டை வெள்ளைக்கருவில் முக்கி எடுத்து, பிரட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
இட்லி பர்கர் தயாரிப்பு:
1. வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய், தக்காளியை வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. இட்லிகளை குறுக்காக வெட்டி, இரண்டு பகுதிகளாக்கிக் கொள்ளவும்.
3. தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணெய் ஊற்றி, இட்லியை இருபுறமும் பொன்னிறமாக வறுக்கவும்.
4. இட்லியின் ஒரு பகுதியின் மேல் புதினா சட்னியை தடவவும்.
5. அதன் மீது கேரட் வெள்ளரிக்காய் தக்காளி அடுக்கி வைத்து, மேலாக கட்லெட் வைக்கவும்.
6. பிறகு இட்லியின் மேல்பகுதியை மூடவும்.
7. இட்லி பர்கர் தயார்! தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறவும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான இட்லி பர்கரை வீட்டிலேயே செய்து ருசிக்கலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக