Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 18 டிசம்பர், 2017

ஏர்டெல் நிறுவனத்தின் 47 கோடி மோசடி.. e-KYC சேவையின் மீது தடை.. ஆதார் அமைப்பு அதிரடி நடவடிக்கை!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏர்டெல் மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் ஆதார் சிம் கார்டு சரிபார்ப்பு மற்றும் அடையாள ஆவணங்கள் சரிபார்ப்பு முறைக்காக ஆதார் விவரங்களைப் பெறுவதற்குத் தடை விதித்துள்ளது. 

பார்தி ஏர்டெல் நிறுவனம் தற்போது தங்களது வாடிக்கையாளர்களின் மொபைல் சிம் கார்டு மற்றும் பேமெண்ட்ஸ் வங்கி சேவைகளுக்கு ஆதார் மின்னணு சரிபார்ப்பு முறையினைக் கடைப்பிடித்து வருகிறது.

ஆனால் இதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இடைக்காலத் தடை விதித்து இருப்பதால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மின்னணு முறை இல்லாமல் மாற்று வழியில் தான் ஆதார் இணைப்பினை செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வாடிக்கையாளர்கள் 


வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல் அவர்களுக்குத் தெரியப்படுத்தாமல் ஏர்டெல் நிறுவனம் பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்கான அதார் மின்னணு சரிபார்ப்பு முறையினைச் செயல்படுத்தியுள்ளது. அது மட்டும் இல்லாமல் எல்பிஜி மானியம் போன்றவற்றுக்காகவும் தங்களது பேமெண்ட்ஸ் வங்கி கணக்குகளை மாற்றி அமைத்துள்ளது.

உடனடி தடை 


இது குறித்த விவரம் அறிந்தவர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் மீதான மின்னணு சரிபார்ப்பு முறையின் இடைக்காலத் தடையானது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

மாற்று வழி 


ஏர்டெல் நிறுவனத்தின் மீது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் விதித்துள்ள இந்தத் தடையினால் பேப்பர்லெஸ் eKYC எனப்படும் மின்னணு வாடிக்கையாளர் அடையாள ஆவணங்கள் சரிபார்ப்பு முறையினைப் பயன்படுத்தாமல் மாற்று வழியில் மட்டுமே செய்ய முடியும்.

ஒப்புக்கொண்ட ஏர்டெல்


 இது குறித்து ஏர்டெல் நிறுவன செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபொழுது இந்திய தனித்துவ அடையாள ஆணயம் இடைக்காலத் தடைவிதித்து இருப்பது உண்மை என்றும், இதற்கான மாற்றும் வழி என்ன என்று ஆராய்ந்து வருவதாகவும், அவர்களைத் திருப்தி செய்யக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

47 கோடி மோசடி


அரசின் திட்டங்களில் இருந்து 23 லட்சம் வாடிக்கையாளர்கள் அவர்களது மானியமாக 47 கோடி ரூபாயினை ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி சேவையில் பெற்றுள்ளதாகவும், ஆனால் அந்தக் கணக்குகளை இது வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தியதும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

உச்ச நீதிமன்றம்


ஆதார் தரவுகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டியவை என்று உச்ச நீதிமன்றம் கூறி வரும் நிலையில் ஏர்டெல் நிறுவனம் இதுப்போன்று செய்து இருப்பது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எப்படி இது நடந்தது? 


ஏர்டெல் சிம் கார்டுகளை வாங்கும் போது சிம் மற்றும் பேமெண்ட்ஸ் வங்கி சேவை என இரண்டுக்கும் சேர்த்து ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏர்டெல் மொபைல் செயலியினை மறு ஆய்வு செய்யும் போது தான் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இதனைக் கண்டுபிடித்துள்ளது. இது ஆதார் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்குப் புறம்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக