Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 8 டிசம்பர், 2017

ரசம் சுவையா செய்ய வரலைன்னு கவலையா? இதோ யம்மியா ரசம் பண்ண ட்ரிக்ஸ்!!

ரசம் என்பது தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ரெசிபி ஆகும். இதை எல்லா தருணங்களிலும் பொதுவாக எல்லா வீடுகளிலும் இதைச் செய்து மகிழ்வர். ரசம் என்பது காரமான சுவையுடன் நாக்கை சொட்டை போடச் செய்யும் புளிப்பு சுவையுடன் இருக்கும். இதை அப்படியே சுடச்சுட உள்ள சாதத்தில் ஊற்றி சாப்பிடும் போது இதன் சுவையே தனி தான்.
இங்கே நாம் தக்காளியைக் கொண்டு காரசாரமான ரசம் சூப் செய்வதை பார்க்க போகிறோம். இந்த அரோமேட்டிக் சூப்பை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல் நலம் சரியில்லாத போது செய்து கொடுத்தால் நல்லது.
இந்த ரசத்தில் வேறு எந்த விதமான பருப்பு வகைகளும் சேர்க்காமல் செய்யக் கூடியது. நீங்கள் எப்பொழுதும் ரசத்திற்கு ஒரு உள்ளங்கை அளவு சமைத்த துவரம் பருப்பை மட்டும் பயன்படுத்துவதால் ஒரு புதுவிதமான சுவையை பெறலாம் . நிறைய விதமான ரசங்கள் இருக்கின்றன : மிளகு ரசம், லெமன் ரசம் மற்றும் கொள்ளு ரசம் ஆகும். இதில் தக்காளி ரசம் அதிகமாக செய்வதோடு உடலுக்கும் நல்ல மருந்தாகும்.
ரசம் என்பது ஒரு எளிதான விரைவில் செய்யக்கூடிய ஆரோக்கியமான ரெசிபி ஆகும். எனவே அப்படிப்பட்ட ஆரோக்கியமான தக்காளி ரசத்தை எப்படி செய்வது என்பதை காணலாம்.

ரசம் ரெசிபி /தக்காளி ரசம் செய்வது எப்படி /பயிறுகள் இல்லாத ரசம் செய்வது எப்படி /தக்காளி ரசம் ரெசிபி


PREP TIME 5 Mins 
COOK TIME 40M 
TOTAL TIME 45 Mins 
Recipe Type: சைடிஸ் 
Serves: 2 பேர்கள் 

INGREDIENTS 

தக்காளி - 3 
தண்ணீர் - 3 கப் 
பூண்டு (தோலுடன்) - 4 பல் 
மிளகு - 1 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன் உ
ப்பு - தேவைக்கேற்ப 
புளி - 1/2 லெமன் அளவிற்கு 
ரசம் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 1 டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை - 8-10 
பெருங்காயம் - கொஞ்சம் 
கொத்தமல்லி இலை(நறுக்கியது) - 1/2கப் 
நெய் - 2 டேபிள் ஸ்பூன் 

HOW TO PREPARE 

முதலில் தக்காளியை எடுத்து கொண்டு அதன் மேல் பகுதியை நீக்கி கொள்ளுங்கள் 2-3 செங்குத்தான துண்டுகளாக தக்காளியை வெட்டி கொள்ளுங்கள். 
இப்பொழுது தக்காளியை நல்ல அடிகனமான சூடான பாத்திரத்தில் போடுங்கள். இப்பொழுது தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். 
தக்காளியானது நன்றாக வெந்து மென்மையாகும் வரை கொதிக்க விடவும் இப்பொழுது வேக வைத்த தக்காளியை தனியாக ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும். 
அதன் தண்ணீர் பிறகு பயன்படுத்தப்படும். 5 நிமிடங்கள் அதை குளிர வைக்க வேண்டும் பிறகு அதன் தோலை உரித்து விட்டு அதை நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். 
பூண்டு பல்களை நுணுக்கும் உரலில் போட்டு கொள்ளவும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு மற்றும் சீரகம் சேர்க்கவும் இப்பொழுது உரலின் கைப்பிடியை கொண்டு கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும் 
இப்பொழுது நாம் பயன்படுத்திய பாத்திரத்தில் உள்ள தக்காளி வேக வைத்த தண்ணீரை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும். 
இப்பொழுது நன்றாக பிசைந்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டையும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் போட வேண்டும். 
இப்பொழுது உப்பு மற்றும் புளி சேர்த்து 8-10 நிமிடங்கள் சமைக்க வேண்டும் ரசம் பவுடரை சேர்க்கவும் 
இப்பொழுது தாளிக்கும் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்ற வேண்டும் இப்பொழுது கடுகு மற்றும் ஒரு டீ ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். 
பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் கடுகு நன்றாக வெடிக்க வேண்டும் தாளித்ததை ரசத்தில் கொட்டி விடவும் இப்பொழுது நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவ வேண்டும் 
இப்பொழுது நெய் சேர்க்க வேண்டும் இதை அப்படியே ஒரு பெளலிற்கு மாற்றி சூடான ரசம் மற்றும் சாதத்துடன் பரிமாறவும்.

 INSTRUCTIONS 

1. ரசம் பவுடருக்கு பதிலாக சாம்பார் பொடியையும் பயன்படுத்தலாம். 
2. இதனுடன் வேக வைத்த துவரம் பருப்பையும் சேர்த்தால் வித்தியாசமான சுவையை தரும். 

NUTRITIONAL INFORMATION 

பரிமாறும் அளவு - 1 கப் 
கலோரிகள் - 100 
கொழுப்பு - 4 கிராம் 
புரோட்டீன் - 3 கிராம் 
சர்க்கரை - 5 கிராம் 
நார்ச்சத்து - 3 கிராம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக