Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 5 டிசம்பர், 2017

நெடுஞ்சாலை வழியாகப் பயணம் செய்பவர்களுக்குப் பேடிஎம் அறிமுகம் செய்த புதிய சேவை..!

நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது மின்னணு முறையில் ம் ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தின் வழியாக டோல் கட்டணத்தினைச் செலுத்த கூடிய பேடிஎம் ஃபாஸ்டேக் சேவையினைப் பேடிஎம் பேமெண்ட்ஸ் பாங்க் நிறுவனம் திங்கட்கிழமை அறிமுகம் செய்தது.
பேடிஎம் ஃபாஸ்டேக் டோல் கட்டண சேவை தற்போது முழுமையாகப் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் மத்திய அரசு டிசம்பர் 1 முதல் பதிவு செய்து வாங்கப்படும் அனைத்து கார்களுக்கும் ஃபாஸ்டே கட்டாயம் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தானாக டோல் கட்டணம் செலுத்தலாம்

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது என்பிசிஐ மூலமாகப் பேடிஎம் கணக்குடன் இணைக்கப்பட்ட டேக் செவையினை வைத்து உடனடியாக, தானாக டோல் கட்டணத்தினைச் செலுத்த முடியும். பாஸ்டேக் சேவை நாடு முழுவதும் உள்ள 380 டோல் பிளாசாக்களிலும் பயன்படுத்தி 55,000 கிலோமீட்டர் பயணத்தினை நிற்காமல் தொடரலாம்.
நவம்பர் மாதம் மட்டும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவையின் சோதனை முயற்சியில் 1 மில்லியன் ஃபாஸ்டாக் டோல் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கார் நிறுவனங்கள்

தற்போது பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியானது மாருதி, ஹூண்டாய், டாட்டா, மெர்சிடிஸ், ரெனால்ட், BMW, வோல்ஸ்வேகன், வோல்வோ போன்ற நிறுவனங்களுடன் பேடிஎம் ஃபாஸ்டேகினை பொருத்துவதற்காகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே கார் வைத்துள்ளவர்கள்

ஏற்கனவே வாகனங்களை வாங்கிப் பயன்படுத்துபவர்கள் ஃபாஸ்டேகினை இணையதளம் மூலமாகப் பேடிஎம் செயலி பயன்படுத்தி வாங்கலாம். ஃபாஸ்டேக் மூலம் டோல் கட்டணம் செலுத்தும் போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 7.5 சதவீதம் வரை கேஷ்பேக் ஆஃபர்களை வாகன ஓட்டுநர்களால் பெற முடியும்.

இலக்கு

2017-2018 நிதி ஆண்டு முடிவதற்குள் 10 லட்சம் வாகனங்களில் பேடிஎம் ஃபாஸ்டேக் சேவையினைப் பயன்படுத்த வைக்க வேண்டும் என்று பேடிஎம் முடிவு செய்துள்ளது.
எரிபொருள் மிச்சமடையும்


எரிபொருள் மிச்சமடையும்

பேடிஎம் ஃபாஸ்டேக் பயன்படுத்தும் போது டோல்களில் காத்திருந்து கட்டணம் செலுத்த வேண்டும் என்பது இல்லை, இதனால் எரிபொருள் மிச்சமடையும், சில்லறை சிக்கல் கிடையாது என்றும் ரொக்க பணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்றும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ரேனு சத்தி கூறினார்.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவை


பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவை

சென்ற வாரம் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவையினை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் துவக்கி வைத்தார். குறைந்தபட்ச இருப்புத் தொகை ஏதும் இல்லாமல் நிர்வகிக்கக் கூடிய சேமிப்பு கணக்குகளை அளிக்க உள்ள பேடிஎம் 31 கிளைகள் மற்றும் 3,000 வாடிக்கையாளர்கள் மையங்களை இந்தியா முழுவதும் விரவில் அமைக்க முடிவு செய்துள்ளது.
 ஏடிஎம்

ஏடிஎம்

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவை அளிப்பது மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் 1 லட்சம் பேடிஎம் ஏடிஎம் மையங்களை அமைக்கவும் திட்டம் தீட்டியுள்ளது.
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக