Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 2 ஜனவரி, 2018

ரூ.2000 வரையிலான டெபிட் கார்டு, பீம் செயலி பரிவர்த்தனைக்கு வரி கிடையாது: அமலுக்கு வந்தது சலுகை

பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக டெபிட் கார்டு , மற்றும் பீம் ஆப் மூலம் 2, 000 ரூபாய் வரையிலான பண பரிவர்த்தனைக்கு, கட்டண வரி செலுத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் டெபிட் கார்டு , மற்றும் பீம் செயலி மூலம் ரூ.2 ஆயிரம் வரை பொருட்கள் வாங்கும்போது அதற்குரிய பரிமாற்ற கட்டணத்தை அரசே ஏற்பது என்ற பரிந்துரைக்கு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது

டெபிட் கார்டு , பீம் செயலி மூலம் 2000 ரூபாய் வரை பண பரிவர்த்தனைகள் செய்தால் அதற்கான வரியை அரசே செலுத்தும். இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். 

இந்த திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் அரசுக்கு ரூ.2,512 கோடி இழப்பு ஏற்படும் என்று நிதிச் சேவைகள் செயலாளர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக