மத்திய நிதி அமைச்சகம் இரண்டு பொதுத் துறை வங்கிகளில் இருந்து 5 புகார்களைப் பெற்றுள்ளது. அதில் வங்கி கணக்கை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் ஆதார எண்ணுடன் இணைக்கப்பட்ட தங்களது வங்கி கணக்கில் லட்சம் கணக்கில் திருடு போனதாகப் புகார் அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.
நாம் விசாரித்ததின் படி இது வரை 4 நிகழ்வுகள் இதேப்போன்று நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இவை பற்றி விளக்கமாக இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
ஆந்திரா வங்கி
ஆந்திரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களிடம் இருந்து 4,20,098 ரூபாய் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமலே எடுக்கப்பட்டுள்ளது.
சிண்டிகேட் வங்கி
ஆந்திரா வங்கியைப் போன்றே ஆதார கார்டுடன் இணைக்கப்பட்ட சிண்டிகேட் வங்கி கணக்கில் இருந்து 1,21,500 ரூபாய் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அருண ஜெட்லி
நிதி அமைச்சர் அருண ஜெட்லி நாடாளுமன்றத்துச் செவ்வாய்கிழமை ஆதார எண் இணைக்கப்பட்ட பிறகு 2015-ம் ஆண்டு 7.65 லட்சம் மதிப்பிலான பணம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக 20 புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கில் இருந்து 5.89 லட்சம் வரை வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டதாக 15 புகார்கள் பெறப்பட்டுள்ளது.
எஸ்பிஐ
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வங்கியில் இருந்தும் 80,500 ரூபாய் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் ஆதார எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
யூகோ வங்கி
ஆதார எண் இணைக்கப்பட்ட யூகோ வங்கி கணக்குகளில் இருந்து 95,250 ரூபாய் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய தனிநபர் அடையாள ஆணையம்
இந்திய தனிநபர் அடையாள ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்களிடம் இருந்து எந்தத் தரவும் திருடப்படவில்லை என்றும் வங்கி கணக்கில் இருந்து பனம் எடுக்கப்பட்டதற்கு வங்கிகளின் இணையதளச் சேவைகள் தான் பொறுப்பு என்று கூறியுள்ளது.
அமானுஷ்யம்
,
உள்ளூர் முதல் உலகம் வரை
,
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக