ஆதார்தான் 2017ல் மக்கள் அதிகம் பயன்படுத்திய வார்த்தையாக இருக்கும். அந்த அளவிற்கு அரசு மக்களை 'ஆதார், ஆதார்' என்று படுத்தி எடுத்தது.
மேலும் ஆதார் அமைப்பு, ''ஆதார் அட்டைதான் உலகில் மிகவும் பாதுகாப்பான அட்டை'' என்று கடந்த நவம்பர் மாதம் பேசி இருந்தது. மேலும் ஆதார் குறித்து பிரபலங்கள் கேட்கும் காமெடியான கேள்விகளுக்கு ஆதார் அமைப்பும் காமெடியாக பதில் அளித்து வந்தது.
நடந்தது என்ன
'தி டிரிபியூன்' என்று ஆங்கில பத்திரிக்கைதான் இந்த ஸ்டிங் ஆப்ரேஷனை நடத்தி இருக்கிறது. பஞ்சாப்பில் இருக்கும் வாட்ஸ் ஆப் குழு ஒன்று எந்த ஆதார் விவரம் கேட்டாலும் கொடுக்கிறது என்பதை கேள்விப்பட்டு அந்த குழுவில் இந்த பத்திரிகையை சேர்ந்த பெண் ஒருவர் சேர்ந்து இருக்கிறார். அதை கவனமாக கண்காணித்து வந்துள்ளார்.
500
அந்த குழுவின் அட்மீன் அணில் குமாரிடம் 'பேடிஎம்' மூலம் 500 ரூபாய் கொடுத்தால் போதும் நாம் கேட்கும் ஆதார் விபரத்தை அவரே எடுத்து கொடுத்துவிடுவார். இதற்கு 10 நிமிடத்திற்கு மேல் ஆகாது என்றும் கூறியுள்ளார். அதேபோல் அந்த பெண் பத்திரிக்கையாளர் கேட்ட ஆதார் விவரத்தை 10 நிமிடத்தில் எடுத்து கொடுத்து இருக்கிறார்.
என்ன வேண்டும்
இன்னும் 300 ரூபாய் அதிகம் கொடுத்தால் அந்த நபர் ஒரு ஐடி பாஸ்வேர்ட் கொடுப்பார். அதை வைத்து நாமே எந்த விவரம் வேண்டுமானாலும் ஆதார் தளத்தில் இருந்து திருடிக் கொள்ளலாம். வெறும் 10 நிமிடம் போதும். தற்போது இந்த குழு கையும் களவுமாக பிடிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று வெளியான இந்த ஸ்டிங் ஆப்ரேஷன் விவரங்கள் இந்தியாவையே அதிர வைத்து இருக்கிறது.
என்ன ஆனது
இந்த குழு மூலம் நாம் ஆதாரில் என்ன விவரம் எல்லாம் கொடுத்து இருக்கிறோமோ அதை எல்லாவற்றையும் அபகரிக்க முடியும். இதுவரை ஆதாரில் யார் எல்லாம் தங்களது பெயரை பதிவு செய்தார்களோ அவர்கள் விவரம் எல்லாம் திருடப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த ஒரு குழு மட்டும் இல்லாமல் இந்தியா முழுக்க 100க்கும் அதிகமான இப்படிப்பட்ட குழுக்கள் இயங்கி வருவதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டு இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக