போலீஸ் கமிஷனர் அலுவலகம்.
கமிஷனர் திரிபாதி தனக்கு
முன்பாய் உட்க்கார்ந்திருந்த விவேக்கையும் விஷ்ணுவையும் மாறி மாறி பார்வையால்
நனைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்.
"சி.சி.டி.வி.
காமிராக்களையே 'ஜாம்' பண்ணக்கூடிய அளவுக்கு ஒரு ஜாமரை தன்னோட உடம்பில் பொருத்திக்
கொண்டு ஒரு பெண் நர்ஸ் யூனிஃபார்மில் ஹாஸ்பிடலுக்குள்ளே நுழைந்து ஜெபமாலையைக் கொலை
செய்ய முயற்சி பண்ணியிருக்காங்கற விஷயத்தை நாம் சாதாரணமாய் எடுத்துக்க முடியாது
மிஸ்டர் விவேக்... இந்தச் சம்பவத்துக்குப் பின்னாடி ஒரு புத்திசாலியான டீம்
இருக்கும்ங்கற உண்மையும் நாம புரிஞ்சுக்கணும்....!"
"ஸார்... அதை நான்
ஏற்கனவே அஸ்யூம் பண்ணிட்டேன். மும்பையில் ஒரு கோயில் வாசலில் அனிஷ் மெஹ்ரா என்கிற
கோடீஸ்வர இளைஞன் கொலை செய்யப்பட்ட விவகாரத்துக்கும், இங்கே சென்னையில் வேளச்சேரி
ரயில்வே ஸ்டேஷனில் வைத்து சுடர்கொடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும்
பின்னாடி இயங்கற கும்பல் வெரி பவர்ஃபுல் யூனிட். ரொம்பவும் புத்திசாலித்தனமாய்
அனிஷ் மெஹ்ராவை கொலை செய்ய ஒரு பதினைந்து வயது சிறுவனை பயன்படுத்தியிருக்காங்க.
அந்தப் பையன் கையில் இருந்த கத்தியும் 'அடாமிக் நைஃப்' என்கிற அதி நவீன ஆயுதம்...
சுடர்கொடிக்கு டில்லியில் இருக்கிற செய்தியாளர் ஒருவர் அனுப்பின 'வாட்ஸ் அப்' பில்
பதிவாகியிருந்த கொலையாளி சிறுவனைப் பார்த்ததும் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டிருக்கு.
அந்த சிறுவனை தமிழ் நாட்டில் ஏதோ ஒரு இடத்தில பார்த்ததாக ஜெபமாலையிடம்
சொல்லியிருக்கா."
கமிஷனர் குறுக்கிட்டு
கேட்டார்.
"பட்.... அந்த
சிறுவன் யார்ங்கறதை சுடர்கொடியால ஐடென்டிஃபை பண்ண முடியலை....?"
"இல்ல ஸார்...
சுடர்கொடிக்கு அந்தப் பையன் யாருன்னு தெரிஞ்சிருக்கு... அந்த உண்மையை
ஜெபமாலைகிட்டயும் சொல்லியிருக்கா..."
"தனக்குத்
தெரியாதுன்னு ஜெபமாலை சொன்னதாய் நேத்து ராத்திரி நீங்க சொன்னீங்களே மிஸ்டர்
விவேக்...?"
"சொன்னேன் ஸார்...
ஆனா ஜெபமாலை ரத்த வாந்தி எடுத்து ஹாஸ்பிடலுக்குப் போறதுக்கு முந்தி அவ என்கிட்டே
ரெண்டு மூணு வார்த்தைகளைப் பேசினா. பட் சத்தம் வரலை... வெறும் லிப் மூவ்மெண்ட்
மட்டும்தான். அந்த உதட்டு அசைவுகளை வெச்சு ஜெபமாலை சொன்ன வார்த்தைகள் எதுவாக
இருக்கும்ன்னு தொன்னூறு சதவீதம் கண்டு பிடிச்சுட்டேன் சார்...!"
கமிஷனரின் முகம்
முழுவதும் பவுடர் பூசிய தினுசில் மகிழ்ச்சி பரவியது.
"குட் எஃபர்ட்...
அது என்ன வார்த்தைகள்?"
"மூணு வார்த்தைகள்
ஸார் குர்நோக்கம், ஜே.சி.ஹெச். ஹாசீர்வதம்...!"
"ஒரு வார்த்தை கூட
புரியலையே?"
"எனக்கும்தான்
ஸார்...! ஆனா ஒரு விஷயம் தெளிவாய் புரிஞ்சது. தட் ஈஸ் வெரி கிரிஸ்டல் க்ளியர்
."
"என்ன?"
"சுடர்கொடி
ஜெபமாலைக்கு தெரியப்படுத்தின விஷயங்களை ஜெபமாலை என்கிட்டே சொல்ல விருப்பப்படலை.
ரத்த வாந்தி எடுத்து உயிருக்கு ஆபத்து என்கிற நிலைமை வந்த போதுதான் என்கிட்டே
உண்மையைச் சொல்ல விரும்பியிருக்கா... அவ சொல்ல விரும்பினாலும் பேச்சு வரலை.
ஆனாலும் அவளுடைய உதட்டசைவுகளை என்னுடைய செல்போனில் வீடியோவாய் எடுத்திருந்ததால அதை
வீட்ல வெச்சு பலமுறை மானிட்டர் பண்ணிப் பார்த்தேன். மவுத் எக்ஸ்பிரஷன்ஸ் அண்ட் லிப்ஸ்
இன் பாடி லாங்க்வெஜ் ( MOUTH EXPRESSIONS AND LIPS BODY LANGUAGE ) பெரும்பாலும்
இந்த முறையில் கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகள் சரியாக இருக்கும்."
"ஆனால்
புரியவில்லையே...?"
"கண்டு
பிடிச்சுடலாம் ஸார்..."
"ஹௌ... ஒண்ணுக்கு
ஒண்ணு புரியாத சம்பந்தம் இல்லாத வார்த்தைகள். குர்நோக்கம், ஜே.சி.ஹெச்.
ஹாசீர்வதம்"
"இந்த வார்த்தைகள்
சம்பந்தமாய் நான் ஒருத்தரை விசாரிக்க வேண்டியிருக்கு ஸார்..."
"ஹூ ஈஸ் தட் ?"
" 'வளையோசை' பெண்கள்
பத்திரிக்கையின் ஆசிரியர் மீனலோசினி... அந்தப் பத்திரிக்கையின் பிரதான
ரிப்போர்ட்டர்தான் சுடர்கொடி. ஜெபமாலை இப்போ பேசக்கூடிய நிலைமையில் இல்லை. நர்ஸ்
யூனிஃபார்மில் ஜெபமாலையைக் கொலை செய்ய வந்த பெண்ணும் எப்படியோ தப்பிச்சுப்
போயிட்டா.. இந்த நிமிஷம் நமக்கு யூஸ்ஃபுல்லாயிருக்கற ஒரே நபர்
மீனலோசினிதான்."
"இட்ஸ் ஓ.கே.
மிஸ்டர் விவேக்... இந்த சுடர்க்கொடி மர்டர் கேஸ்ல உண்மைகள் சீக்கிரமே வெளிவந்து
கொலையாளி கைது செய்யப்படணும்... இல்லேன்னா மீடியாக்களுக்கு நாம பதில் சொல்லி
சமாளிக்க முடியாது. தினசரி ராத்திரி ஒன்பது மணியானால் போதும் எல்லா டி.வி.
சானல்களிலும் சமூக ஆர்வலர்கள் என்கிற போர்வையில் நாலைஞ்சு பேர் உட்கார்ந்துகிட்டு நம்ம
டிபார்ட்மெண்டை அடிச்சு துவைச்சு காய போட்டுக்கிட்டு இருக்காங்க...."
"சார்... நவ் வீ ஆர்
ஆன் த ரைட் வே.... கொலையாளியை சீக்கிரமே நெருங்கிடலாம்"
"டூ இட் ஃபர்ஸ்ட்
"
போலீஸ் கமிஷனர் எழுந்து
கொண்டார். விவேக்கும் விஷ்ணுவும் அவருடைய கையைப் பற்றி குலுக்கிவிட்டு வெளியே
வந்தார்கள்.
வராந்தாவில் நடக்கும்
பொது விஷ்ணு கேட்டான்.
"இதெல்லாம் எங்கே
கத்துக்கிட்டிங்க பாஸ்?"
"எதெல்லாம்?"
"மவுத்
எக்ஸ்பிரஷன்ஸ் அண்ட் லிப்ஸ் இன் பாடி லாங்க்வெஜ் போன்ற எனக்கு அதிசயமான
விஷயங்களை...!"
"க்ரைம்
பிராஞ்சுக்குள்ளே வந்துட்டா எக்ஸ்ட்ராவா ஒரு மூளை வேணும்..!"
"தலை அப்ப ரொம்ப
பெருசாயிருக்கும் பாஸ்"
விவேக் முறைதான்.
"டேய்!"
"ஸாரி பாஸ்... நீங்க
என்ன சொல்ல வாறீங்கன்னு புரியுது. தலைக்குப் பின்னாடியும் ரெண்டு கண்கள்
வேணும்ன்னு சொல்றீங்க....?"
"அதே தான்...!"
"கொஞ்சம் அசிங்கமாய்
இருக்கும் பாஸ்?"
"விஷ்ணு ... பி...
சீரியஸ்... இந்த சுடர்க்கொடி கேஸ்ல நாம இன்னமும் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்
போடலை. எப்பவும் ஒரு ஜாலியான மூடில் பேசற கமிஷனர் இன்னிக்கு அப்படிப் பேசலை. நோட்
பண்ணியா...?"
"பண்ணாமே இருப்பேனா
பாஸ்? ஏதோ பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி நம்ம இந்திய வெளியுறவுத்துறை
அமைச்சர்கிட்டே பேசற மாதிரியான முகபாவம்...."
"அவரோட கோபம்
நியாயமானது. நாம சீக்கிரம் கொலையாளியை நெருங்கணும்...!"
"எல்லாப் பக்கமும்
கும்மிருட்டாய் இருக்கே பாஸ். போதாத குறைக்கு அந்த மூணு வார்த்தைகள் குர்நோக்கம்,
ஜே.சி.ஹெச். ஹாசீர்வதம்.
இந்த நிமிஷம் கேஸோட
நிலைமை எப்படியிருக்கு தெரியுமா பாஸ்?"
"சொல்லு...!"
"பிச்சைக்காரன்
தட்டுல விழுந்த பல வீட்டு சாப்பாடு மாதிரி இருக்கு..."
விவேக் திரும்பி நின்று
உஷ்ணமாய் பார்க்க, "ஸாரி பாஸ்.... வேற உதாரணம் எதுவும் எனக்கு சட்டுன்னு
தோணலை ." என்றான் விஷ்ணு.
விவேக் தன் ஆட்காட்டி
விரலை உயர்த்தினான்.
"இப்ப சொல்றேன்
கேட்டுக்க...."
"சொல்லுங்க பாஸ்
"
"உனக்கு பனிரெண்டு
மணி நேரம் டயம். அதுக்குள்ளே அந்த மூணு வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்ன்னு நீ
சொல்லியாகணும். இல்லேன்னா என்கூட இனிமே வராதே... மயிலாப்பூர் பக்கம் போய் எந்த
ஹோட்டல்ல தயிர் வடையும் டிகிரி காப்பியும் நல்லாயிருக்குன்னு ஒரு சர்வே எடு!"
"கவலைப்படாதீங்க
பாஸ்... ஒரு ரெண்டு மணி நேரத்துக்குள்ளே ஆப்கானிஸ்தான் மொழியை கத்துகிட்டாவது அந்த
மூணு வார்த்தைகளுக்கும் என்ன அர்த்தம்ங்கறதைக் கண்டு பிடிச்சுடறேன்."
விவேக் கார்
பார்க்கிங்கிற்கு வந்து காருக்குள் ஏறி ட்ரைவிங் சீட்டை ஆக்ரமித்தான்.
"இப்போ நாம எங்கே
போறோம் தெரியுமா?"
"தெரியும் பாஸ்...!
வளையோசை பத்திரிக்கை ஆபீஸிக்குப் போய் அந்த அரைக் கிழவியை ஸாரி மீனலோசினியைப்
பார்த்துப் பேசப் போறோம்."
"விஷ்ணு !"
"ஸாரி பாஸ்...
இன்னிக்கு எனக்கு நேரம் சரியில்லை. நாக்குல சனி, ராகு, கேது மூணு பெரும் வரிசையாய்
உட்கார்ந்திருக்காங்க போலிருக்கு. நான் எதை பேசினாலும் அது தப்பாயிடுது.."
விவேக் குரலைத்
தாழ்த்தினான்.
"விஷ்ணு... நான்
சொல்றதை கவனி. பதட்டப்பட்டு கீழே இறங்காதே...!
"எ...எ... என்ன
பாஸ்...?"
"கொலையாளி இந்த
கமிஷனர் ஆபிஸ் வளாகத்துக்குள்ளேதான் இருக்கணும்!"
புத்தகத்தின் தலைப்பு
சிஸ்டம்ஸ் அண்ட் ஆபரேஷன்ஸ் என்று இருந்தது.
அதனுடைய சில பக்கங்களை புரட்டியவர் ஒரு பக்கத்தில் பார்வையை நிறுத்தி
அதனுடைய சில பக்கங்களை புரட்டியவர் ஒரு பக்கத்தில் பார்வையை நிறுத்தி
"இதைப் படிச்சுப்
பாருங்க ஸார்...!" என்றார்.
"யூவி 30 யூ எச்
எஃப் அண்ட் வி எச் எஃப் ஜாமர்ஸ் பிளாக்கர்ஸ் டூ ஜாம் ஸி ஸி டிவி கேமராஸ் அண்ட் ஆர்
எஃப் ஐ டி மைக்ரோசிப்ஸ்( UV 30 UHF AND VHF JAMMERS AND BLOCKERS TO JAM CCTV
CAMERAS AND RFID MICROCHIPS)
விவேக்கின் விழிகள்
வியப்பில் விரிய ஆபரேட்டர் சொன்னார். "நர்ஸ் யூனிஃபார்ம் போட்ட அந்த பெண்
தன்னோட உருவம் சிசி டிவி கேமராக்களுக்கு சிக்காம ப்ளர்ரா தெரியறா மாதிரி இந்த
ஜமாரை தன்னோட உடம்போட ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டு வந்துருக்கலாம் ஸார்...!''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக