பிரசவத்தின்போது வலி குறைவாக இருக்க என்ன செய்ய வேண்டும்?...
வீட்ட கட்டிப்பாரு, கல்யாணம் செஞ்சு பாரு என்று சொல்வார்கள். இது பொதுவாக ஆண்களுக்கு சொல்லப்பட்டதாகவே எடுத்துக்கொள்கிறோம். ஆண்களுக்கு இருக்கிற பொறுப்புகளையும் சிரமங்களையும் வெளிப்படுத்தும் அளவுக்கு பெண்கள் படுகிற சிரமங்கள் பற்றி பொதுத்தளங்களில் பேசுவதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக, மறுஜென்மம் என்று சொல்லப்படுகிற பிரசவ வலி பற்றி ஆண்கள் கவலைப்படுவதே இல்லை.
பிரசவ வலி
பிரசவ வலி என்பதை அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியாது. மகப்பேறின் போது ஏற்படும் வலியையும், சௌவுகரியத்தையும் குறைக்கும் வழிமுறைகள் இதோ..
"மருத்துவ துறையில், சுயநினைவுள்ள, வலியில்லா தாயின் கையில், பிறந்த பச்சிளங் குழந்தையை முதல் முறை தரும் அந்த தருணம் அவ்வளவு உற்சாகமானது" என்பார் மோயர். இந்த கூற்று, சுகப்பிரசவத்தில் பிள்ளையைப் பெற்ற தாயின் உணர்வை பிரதிபலிக்கிறது.
தாய்மையை உணர்தல்
ஒரு பெண் தன் வாழ்நாளில் அடையும் வலியிலேயே மிக தீவிரமான வலி, மகப்பேறு வலி தான். மெக்கில் ஆய்வில், பல்வேறு மகப்பேறு வலிகளை ஒப்பிட்டு, இது தான் மனிதன் தாங்கிக்கொள்ளும் வலிகளிலேயே, மிக தீவிரமான வலி என கூறுகின்றனர். வலியில் இருக்கும் பெண்ணிற்கு வலி நிவாரணத்திற்கான அறிகுறியே தேவையில்லை. மருத்துவ முரண்பாடுகள் ஏதும் இல்லாதபோது, மகப்பேறின் போது தாய்மை மட்டுமே சிறந்த வலி நிவாரணி என்கிறார், ஹிந்துஜா மருத்துவமனையில் பணிபுரியும் மகப்பேறு மருத்துவர் கிரண் கோயில்கோ.
சமீபகாலமாக, எபிடூரல் (அனஸ்தீசியா முறை) என்னும் உணர்வு நீக்கி முறை மகப்பேறின் போது நிரந்திர வலிநிவாரணியாக பிரபலமடைந்து வருகிறது.
கூடுதல் மற்றும் மாற்று முறைகள்
பிரசவத்தின்போது தொடர்ந்து அரவணைப்பு, தொடுதல் மற்றும் மசாஜ், நீராடுதல், சூடேற்றும் பேட்கள், தண்ணீர் ஊசிகள், அக்குபஞ்சர், ஹிப்சிசம்(மனவசியம்) போன்றவை வலியை ஓரளவு பொறுத்துக் கொள்வதற்கு வேண்டுமானால் உதவிகரமாக இருக்கும். ஆனாலும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களை வைத்துப் பார்க்கும்போது இந்த முறைப்படி வலியைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை நிரூபிக்க முடியவில்லை.
நைட்ரஸ் ஆக்ஸைடு தெரபி
நைட்ரஸ் ஆக்ஸைடு மகப்பேறு அனஸ்தீசியா முறையானது, தாய்க்கும் சேய்க்கும் மட்டுமல்லாது,அவர்களை கவனித்துக் கொள்பவர்களுக்கும் கூட மிக பாதுகாப்பானது. இதை உபயோகிப்பது மிக எளிதானது மற்றும் இது உட்புற ஆக்டோசின் (பிரசவத்தின்போது தூண்டப்படும் ஹார்மோன்) வெளியேற அல்லது செயல்பட இடையூறு செய்யாது. மேலும் இம்முறை, உடலுக்கோ அல்லது பிரவத்தின் போதோ எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது. ஆக்சிடோசின் வெளியேறுவதை தடுக்காது என்பதால் நைட்ரஸ் ஆக்சைடு, தாய், சேயின் முதல் பிணைப்பின் போது சேயின் விழிப்பு தன்மையையும் பாதிக்காது. அதேபோல் பாலூட்டும் போது எந்த சிக்கலும் இருக்காது. மேலும், சிசுவின் இயக்கமீட்பு காலத்தை அதிகரிக்கவும் செய்யாது.
பிரசவத்தின்போது கொடுக்கப்படும் நைட்ரஸ் ஆக்சைடு, ஒரு வலுவான உணர்வு நீக்கி இல்லை. ஆதலால், பிரசவ வலியை தாய் உணர முடியும். ஆனாலும், பெரும்பாலான தாய்மார்களுக்கு மகப்பேறு வலியை குறைக்கவும், மனதை ஓய்வு படுத்தவும் இது அமைகிறது.
மின்னியல் முறையில் நரம்புகளை
தூண்டும் மின்சிகிச்சைமுறை (Transcutaneous
electrical nerve stimulation)
இந்த முறையில், எலக்ரோடுகள் வழியாக தோலுக்கு மின்துடிப்புகள் செலுத்தப்படும். வலி சமிக்ஞைகள் மூளையை அடைய விடாமல் இந்த மின்துடிப்புகள் தடுக்கின்றன. மேலும் இவை இயற்கையான, நல்ல எண்டோபின் ஹார்மேன்களை நம் உடல் வெளியிடத் தூண்டுகிறது. மகப்பேறு வலியைக் கட்டுப்படுத்தவும், பிரசவத்தின் மீதான அதீத ஆவலை குறைக்கவும், அதிலிருந்து கவனத்தைத் திசை திருப்பவும் உதவுகிறது.
எபிடூரல் வலிநிவாரணி ( Epidural analgesia)
தற்போது உலகம் முழுவதும் பரவலாக பிரசவத்தின்போது எபிடூரல் வலி நிவாரணி பயன்படுத்தப்படுகிறது. எபிடூரல் என்னும் உணர்வுநீக்கி முறையில், சிறிய குழாயின் வழியே முதுகுக்கு கீழே வலியை ஏற்படுத்தும் நரம்பில் அனஸ்தீசியா அல்லது மற்ற வலி நிவாரணிகள் செலுத்தப்படும். இதன் மூலம் வலியின் வீரியத்தை குறைத்து, பிரசவத்தை எளிதாக்கும். எனினும், பிரசவத்திற்கு பிறகு மலக்குடல் மற்றும் பிறப்புறுப்பில் அழுத்தத்தினால் வலி ஏற்படலாம்.
பிரசவத்தில் முழுவதுமாக உணர்வற்ற நிலையில் இருப்பதும் சாத்தியமற்றது. ஏனெனில் எங்கே, எப்போது அழுத்தம் தர வேண்டும் என தாய்க்கு தெரிய வேண்டும். இந்த துறையில் மேலும் சில முனு்னுற்றங்கள் நடந்துள்ளன. அதாவது "நோயாளிகளால் கட்டுப்படுத்தப்படும் எபிடூரல் அனஸ்தீசியா" ( Patient Controlled Epidural Analgesia). நோயாளிகளின் உள்ளீடுகளைப் பொறுத்து, இயந்திரத்தில் உள்ள பம்புகளின் மூலம் வலி நிவாரணி மருந்துகள் உட்செலுத்தப்படுகிறது. எப்போதெல்லாம் நோயாளி அதிக வலியை உணர்கிறார்களோ, அப்போது அவர்களே தேவையான மருத்தை அளித்து வலியைக் குறைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் வலியில்லா மகப்பேறு என்ற இலக்கை அடையலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக