Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 12 மார்ச், 2018

தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் பணிபுரிய விருப்பமா? அழைப்பு உங்களுக்குத்தான்...

தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் பணிபுரிய விருப்பமா? அழைப்பு உங்களுக்குத்தான்...


தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர்(03) , ஆய்வக உதவியாளர்(01) பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நேரடி நியமனத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட உள்ளன.

தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்: ஓட்டுநர்
இடஓதுக்கீடு: ஓசி
காலிபணியிடங்கள்: (01)
அலுவலகமுகவரி: துணை இயக்குநர், வட்டார தடய அறிவியல் ஆய்வகம். நீதிமன்ற வளாகம் பின்புறம். திருநெல்வேலி-627011


பதவியின் பெயர்: ஓட்டுநர்
காலிபணியிடங்கள்: (02)
இடஓதுக்கீடு: எஸ்சி (A) விதவை, எம்பிசி(01)
அலுவலகமுகவரி: இயக்குநர்(பொ), வட்டார தடய அறிவியல் துறை. எண் 30 A, காமராஜர் சாலை, மயிலாப்பூர், சென்னை-600004

சம்பள விகிதம்: லெவல்(8)- ரூ19500-62000


பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்
காலிபணியிடங்கள்: (02)
இடஓதுக்கீடு: எஸ்சி (A) விதவை, எம்பிசி(01)
அலுவலகமுகவரி: இயக்குநர்(பொ), வட்டார தடய அறிவியல் துறை. எண் 30 A, காமராஜர் சாலை, மயிலாப்பூர், சென்னை-600004

சம்பள விகிதம்: லெவல்(1)- ரூ15700-50000
ஓட்டுநர் தகுதி
  1. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. நல்ல உடல் தகுதி இருத்தல் வேண்டும். 
  3. பார்வை திறன் குறித்து மருத்துவர் அளித்த சான்று இணைக்கப்பட வேண்டும். 
  4. செல்லத்தக்க நிலையில் உள்ள LMV ஓட்டுநர் உரிமம். 
  5. மோட்டர் வாகன விதிகளின் படி ஒப்பளிக்க தகுதியான அதிகாரி அளித்துள்ள உரிமம் பெற்றிருக்க வேண்டும். 
  6. செல்லத்தக்க முதலுதவி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை பராமரிப்பதில் போதிய அறிவு பெற்றிருத்தலுக்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் தகுதி: 
அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு(01-01-2018 அன்று): குறைந்த பட்சம் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதிக பட்சம் பொது-30 வயது/பிசி&எம்பிசி-32 வயது/ எஸ்சி/எஸ்டி-35 வயது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வயது, கல்வி, சாதி மற்றும் முன்னுரிமை சான்று நகல்களுடன் இணைத்து காலிபணியிடங்கள் உள்ள மேற்குறிப்பிட்ட அலுவலக முகவரிகளுக்கு 27-03-2018-க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
27-03-2018-க்கு பின் பெறப்படும் விண்ணப்பங்களும், சரிவர பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது.

அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிப்போர்,
விண்ணப்பத்தில் வரிசை எண் 5-ல் குறிப்பிட்ட ஓட்டுநர் உரிம விவரத்தினை தவிர்த்து பூர்த்திசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பதிகளுக்கு அருகே வேலை  வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும். பிடிஎப்பில் தகவல்களை இணைத்துள்ளோம்.
Download File

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக