குடிபோதையில் பள்ளி வாகன ஓட்டுனர்.
திருவான்மியூர்:
சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் பிரபல ஶ்ரீ சங்கரா வித்தியாசரமம் பள்ளியை சேர்ந்த வாகன ஓட்டுனர் குடிபோதையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் இன்று மாலை வாகனத்தை இயக்கியுள்ளார்.
வாகனத்தின் உள்ளே பள்ளி மாணவர்களை வைத்துக்கொண்டு வாகனத்தை குடிபோதையில் இயக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருவான்மியூரில் வால்மீகி தெருவில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட வாகனம் தாறுமாறாக ஓடி பல இருசக்கர வாகனங்களில் மோதுவது போல இயக்கியுள்ளார்
இருசக்கர வாகனத்துடன் மோதல்:
சிறிது நேரத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றார் இதை கண்ட அங்குள்ள பொதுமக்கள் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை இடித்து விட்டு நிற்காமல் சென்ற பள்ளி வாகனத்தை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
குடிபோதையில் வாகன ஓட்டுநர்:
இருசக்கர வாகனத்தை இடித்து விட்டு நிற்காமல் சென்ற பள்ளி வாகனத்தை துரத்தி சென்று மடக்கி பிடித்து ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுக்கபட்டது.
சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல்துறையிடம் விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டிய அந்த ஓட்டுநர் ஓப்படைக்கப்பட்டார் காவல்துறையிடம் ஒப்படைக்கும் போதும் இடுப்பில் மதுபான பாட்டிலை சொருகி வைத்திருந்தார்
வாகனத்தில் உள்ளே இருந்த பள்ளி மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வேறு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இதே போன்று விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் குடிபோதையில் வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் இரத்து செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பல பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே போல் பள்ளி நிர்வாகமும் இது போன்ற ஓட்டுநர்களை பணியில் அமர்தாமலிருப்பது நல்லது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக