கலகலப்பா டெய்லி வித்தியாசமான கேம்ஸ், வித்தியாசமான செட்னு கலர்ஃபுல்லா வேலை பார்க்க வேண்டும் ஆசை இருந்தால் இந்த துறை உங்களுக்கானதுதான். ரியாலிட்டி ஷோக்களில் ஆங்கரிங் பண்ணுவது என்பது ஜாலியான வேலை. கொஞ்சம் டைமிங், கொஞ்சம் ரைமிங்க பேசப் பழகி விட்டால் போதும். ரசிகர்கள் ஹேப்பியாகி விடுவார்கள்.
காம்பியரிங் பண்ணவேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது இதற்கு தினசரி நிகழ்வுகள் அனைத்தும் விரல் நுனியில் இருக்க வேண்டியது மிக அவசியம். இதற்கு தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும்.
ஒரு நிகழ்சியை லைவாகத் தொகுத்து வழங்கும்போது, படு அலெர்ட்டாக இருக்க வேண்டும். கொஞ்சம் பிசகினாலும், வேலை காலியாகி விடும். ஆனால் ஆங்கரிங்கில் அடுத்த கட்டம் என்றால் இத்தகைய சவாலை ஏற்றுக் கொள்வதுதான்.
உற்சாகமாக நிகழ்சியை தொகுத்து வழங்கும் போது ரசிகர்களின் அன்பினை வெகு எளிதாக பெறுவதோடு, மனதில் உள்ள அனைத்து கவலைகளை எளிதில் மறக்கலாம்.
தற்போது இதில் செய்தி வாசிப்பதில் இருந்து சமையல் செய்வது வரை பல்வேறு வகையான துறைகள் வந்துவிட்டன வேலை வாய்ப்புக்கும் பஞ்சம் என்பதே இல்லை.
அடிக்கடி சோஷியல் மீடியாவில் லைவ்... கவுன்ட்டர்.. கலாய் என லைப்ப ஹேப்பியா மூவ் பண்ணலாம்.
தொகுப்பாளர் ஆவது எப்படி?
இந்த துறையை பொறுத்தமட்டில் செய்தி தொகுப்பாளர் பணியே கொஞ்சம் கடினமானாதாக கருதப்படுகிறது.
ஒரு செய்தியால் உலகையே மாற்ற முடியும். செய்தி வாசிக்கும் முன் அதற்கு பின் உள்ள ஆயிரக்கணக்கான செய்தி சேகரிப்பர்களின் உழைப்பு ஒழிந்திருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதோடு இதை மக்களிடம் சுவரஸ்யம் குறையாமல் எப்படி சேர்க்கிறோம் என்பதும் முக்கியம்.
எங்கே தொடங்குவது?
+2 முடித்த பின் உங்களது தேர்வு ஆங்கரிங்காக இருப்பின் டிகிரி படிப்பை மாஸ் கம்யூனிகேஷன், ஜெர்னலிசம் போன்ற படிப்புகளை தேர்ந்தேடுக்கலாம்.
இல்லை என்றால் டிப்ளமோ படிப்புகளை தேர்ந்தேடுக்கலாம். டிகிரி முடித்தவராக இருக்கும் பட்சத்தில் பல்வேறு வகையான முதுநிலை டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. டிகிரியை பொறுத்த வரை ரூ30,000 முதல் 2,00,000 வரையில் முதுநிலை டிப்ளமோ ரூ.40,000-1,00000 வரையிலும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
சம்பளம்:
டிவி தொகுப்பாளரை பொறுத்த வரை வருடம் ரூ.3.5லட்சத்தில் இருந்து 6 லட்சம் வரை பெறலாம் அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் வேறுபடும்.
பயிற்றுவிக்கப்படும் கல்லூரி:
- சிம்பியஸ்ஸிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மீடியா & கம்யூனிகேஷன்-புணே
- செயின்ட் சேவியர் கல்லூரி-மும்பை
- லேடி ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரி-புதுதில்லி
- டிபார்ட்மெண்ட் ஆஃப், கிறிஸ்ட் யுனிவர்சிட்டி-பெங்களூர்
- ஆசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்-சென்னை
- டைம்ஸ் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம்-புது தில்லி
- மானிபால் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன்ஸ்-மணிப்பால்
- மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி-சென்னை
ஆங்கரிங் பொறுத்தவரை எப்போதும் பரபரப்பாக இருக்கும் எனவே அதற்கேற்றார் போல் தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். எவ்வளவு சீக்கிரமாக அனுபவத்தை பெறுகிறோமே அந்த வகையில் சம்பள உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. எப்போதும் மக்கள் பார்வையிலே இருக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற துறை ஆங்கரிங் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக