- மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.
மலச்சிக்கல் குணமாக:
- மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
ஞாபக சக்தி பெருக:
- ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரையை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.
குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய:
- மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.
மூளை நரம்புகள் பலம்பெற:
- மணலிக்கீரை வதக்கி சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலப்படும்.
ஈரல் பலம்பெற:
- மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.
இத்தகைய மருத்துவக்குணங்களை வாய்ந்த மணலிக்கீரையை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வாழ்வில் வளம் பெறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக