Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 29 ஆகஸ்ட், 2018

இனிமேல் இந்தியாவில் "டெஸ்" கிடையாது.! "கூகுள் பே" மட்டும் தான்.!

டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்ய உதவும் மொபைல் அப்ளிகேஷன் செயலி "கூகுள் டெஸ்" ஐ, கூகுள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று அனைவரும் பயன்படுத்தும் எளிய பண பரிவர்த்தனை செயலியாக டெஸ் செயலி இருந்துவருகிறது.

இனிமேல் இந்தியாவில்
இன்று டெல்லியில் நடைபெற்ற "கூகுள் ஃபார் இந்தியா" விழாவில் கூகுள் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி டெஸ் மொபைல் வாலட் அப்ளிகேஷன் செயலி இனிமேல் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.

"கூகுள் பே(Google Pay)"

இன்று முதல் "கூகுள் டெஸ்" செயலி "கூகுள் பே(Google Pay)" செயலி என்று பெயர் மாற்றப்படுவதாகக் கூகுள் ஃபார் இந்தியா விழாவில் தெரிவிக்கப்பட்டது.

கூகுள் நிறுவனம்

பெயர் மட்டும் தான் மாற்றப்பட்டுள்ளது, முன்பு இருந்த பயன்பாடு முறைகள் அனைத்தும் அப்படியே தான் இருக்கிறது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

"கூகுள் பே" செயல்பாடுகள்

கூகுள் நிறுவனம் வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில், "கூகுள் பே" இன் செயல்பாடுகள் விரிவுபடுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது. கூகுள் பே பயனர்கள் கடை மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என அனைத்துச் சேவைகளும் விரிவுபடுத்தப்படும் என்று கூறியுள்ளது.

உடனடி கடன்

இந்தியாவின் பெரும்பாலான வங்கி கணக்குகள் உடன் இணைந்து செயல்பட்டு வந்த கூகுள், கூடுதலாகக் கூகுள் பே பயனர்களுக்கு உடனடி கடன்களை வழங்கும் புதிய முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக