Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 3 செப்டம்பர், 2018

இதே நாளில் அன்று


சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள் !
'நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால், உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்." கிரண் தேசாய்



✍ மிக இளம் வயதில் புக்கர் விருது பெற்ற இந்திய பெண் எழுத்தாளர் கிரண் தேசாய் 1971ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் பிறந்தார்.

✍ இவரது முதல் நாவலான 'ஹூல்லபல்லு இன் தி கோவா ஆர்சர்ட்" (ர்ரடடயடியடழழ in வாந புரயஎய ழுசஉhயசன) 1998ல் வெளியிடப்பட்டது. இந்நாவல் பெட்டி ட்ராஸ்க் விருதைப் (டீநவவல வுசயளம யுறயசன) பெற்றுள்ளது.

✍ இவருடைய அடுத்த நாவலான 'தி இன்ஹரிடன்ஸ் ஆஃப் லாஸ்" (வுhந ஐnhநசவையnஉந ழக டுழளள) பல இலக்கிய திறனாய்வாளர்களின் பாராட்டினைப் பெற்றதுடன் 2006ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசினையும் இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.

✍ உலகளவில் சிறந்த நூல்களுக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான புக்கர் விருதைப் பெற்ற கிரண் தேசாய் தனது 47வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
முக்கிய நிகழ்வுகள்

✍ 1814ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி 19ம் நூற்றாண்டின் சிறந்த கணிதவியலாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் சில்வெஸ்டர் லண்டனில் பிறந்தார்.
✈ 1976ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி நாசாவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய் கோளில் தரையிறங்கியது.
🏁 1783ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி அமெரிக்கப் புரட்சிப் போர் முடிவுக்கு வந்தது.