Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 26 செப்டம்பர், 2018

முடி உதிர்வது,கழுத்து சுருக்கம்,பருக்கள் மறைய மாம்பழம் தரும் அழகுக் குறிப்புகள்

Image result for மாம்பழம்

முக்கனிகளில் மட்டுமல்ல.. நம் அழகுக்கு அழகு சேர்ப்பதிலும் முதலிடம் மாம்பழத்துக்குத்தான்.வெயிலை முந்திக் கொண்டு சந்தைக்கு வந்துவிடும் மாம்பழத்தைச் சாப்பிட்டால்சூடு பிடிக்கும் என்றுசிலர் சொல்வார்கள்உண்மையில் அந்தந்த சீஸனில் வருகிற பழங்களைச் சாப்பிடும்போதுதான்அவற்றின் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

இப்போது மொழுமொழு மாம்பழம் தரும் வழுவழு அழகுக் குறிப்புகளைப் பார்க்கலாமா....
                                                                          
மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்புக்கு கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு இருக் கிறது.மாங்கொட்டை பருப்பை அரைத்த விழுதுவெண்ணெய் போல இருப்பதால் இதை 'மேங்கோ பட்டர்'என்று சொல்வார்கள்இதுதலை முடிக்கு கண்டிஷனராக செயல்படுகிறது...
சிலருக்கு முன்பக்க முடி உதிர்ந்துவழுக்கை ஏற்பட்டிருக்கும்இதற்குஒரு டேபிள்ஸ்பூன் மேங்கோபட்டர் (முற்றிய மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்த விழுதுவிளக்கெண்ணெய் ஒருடேபிள்ஸ்பூன் கலந்துதலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்பிறகு பயத்தமாவுகடலை மாவு,சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும்வாரம் இரண்டுமுறை இப்படிச் செய்து வந்தால் முடி உதிர்வது நின்றுமுன்புறம் முடி வளர ஆரம்பிக்கும்.
மேங்கோ பட்டர்நல்லெண்ணெய்தேங்காய் எண்ணெய்விளக்கெண்ணெய்.. இந்த நான்கை யும் சமஅளவில் கலந்து மிக்ஸி யில் அடித்து வெயிலில் வைத்து எடுக்கவும்இதை தலையில் பத்து போல்போட்டு 15 நிமிடம் ஊறவிடவும்பிறகுசம அளவில் வெந்தயம்பயத்தம்பருப்பை கலந்து ஊற வைத்துஅரைத்த விழுதைத் தேய்த்து தலைக்கு குளித்தால்பொடுகுத்தொல்லை போயே போச்சுபொடுகால்முடி உதிர்வது நின்றுகூந்தலும் பளபளக்கும்!
நாற்பது வயதை நெருங்கினாலே சிலருக்கு கழுத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும்இதற்குபாதாம்பருப்பும் கசகசாவும் சம அளவில் சேர்த்து அரைத்த விழுது ஒரு டீஸ்பூன்மேங்கோ பட்டர் ஒருடீஸ்பூன் சேர்த்து கலந்துஅந்த பேஸ்ட்டை கழுத்துப் பகுதியில் மேலிருந்து கீழ்ப்புறமாக பூசி,காய்ந்ததும் கழுவவும்இதை ஒரு மாதம் தொடர்ந்து செய்தால்கழுத்து சுருக்கம் நீங்கிசங்கு போலமின்னும்!
பருக்களால் முகப்பொலிவு குறைந்து விட்டதாகவலை வேண்டாம்தினமும் குளிப்பதற்கு முன் ஒருடீஸ்பூன் வேப்பம்பூ விழுதுஅரை டீஸ்பூன் மாம்பழ சதைஅரை டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்துமுகத்தில் பூசுங்கள்பருக்கள் மறைந்துடல்லடித்த முகமும் டாலடிக்கும்இதிலுள்ள நல்லெண்ணெய்,தோலின் பள பளப்பைக் கூட்டிகூடுதல் மிருது-வாக்கும்.
மாம்பழ சதையுடன் அதே அளவு உலர் திராட்சையை சேர்த்து அரைத்துஅதை ஐஸ் டிரேயில் இட்டுஃப்ரீசரில் வைத்து விடுங்கள்உதடுகள் உலர்ந்து போகும்போதெல்லாம் இந்த ஐஸ்கட்டியை ஒருதுணியில் சுற்றிஉதட்டின் மேல் தடவுங்கள்உதடுகள்ரோஜா இதழ் போல மின்னும்!
புருவங்களில் முடி கொட்டுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது மாம்பழச் சாறுஆரஞ்சு மற்றும்மாம்பழச் சாறை சம அளவு எடுத்து ஃப்ரீசரில் வைக்கவும்.
புருவங்களில் விளக்கெண்ணெய் (நல்லெண்ணெயை ஒரு துளி தடவிஇந்த ஐஸ் கட்டியை ஒருமெல்லிய துணியில் சுற்றிகண் மற்றும் புருவத்தில் ஒற்றி எடுங்கள்தினமும் இரவு தூங்கும் முன்இப்படி செய்து வந்தால்புருவத்திலும் இமையிலும் முடி வளரும்.
மாம்பழக் கன்னங்கள் வேண்டுமாநன்றாகப் பழுத்த மாம்பழச் சதை அரை டீஸ்பூன்கஸ்தூரி மஞ்சள் 2சிட்டிகைபார்லி பவுடர் ஒரு டீஸ்பூன்வெள்ளரி பவுடர் அரை டீஸ்பூன்.. இவை அனைத்தையும்ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள்இந்த பேஸ்ட்டை முகத்தில் 'மாஸ்க்மாதிரி தடவி, 20 நிமிடம் கழித்துகழுவுங்கள்தோலுக்குத் தேவையான நீர் சேர்ந்து கன்னம் கொழுகொழு வென்று நிறமும் கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக