Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 26 அக்டோபர், 2018

வாழைப்பழ அல்வா

எடை கூட உதவும் அல்வா. அது தான் வாழைப்பழ அல்வா
சமையல் செய்ய ஆகும் நேரம்: 60நிமிடம்
பரிமாறும் அளவு: 2 நபர்கள்

தேவையான பொருள்கள்:

  • ரவை ஒரு கப்
  • வாழைப் பழத் துண்டு ஒரு கப்
  • பால் ஒரு கப்
  • சர்க்கரை ஒரு கப்
  • நெய் அரைக் கரண்டி
  • தண்ணீர் அரை கப்


செய்முறை:

  • ரவையை நெய் விட்டுத் தீய விடாமல் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • வாசனை வந்தவுடன் அரை கப் தண்ணீர், 1 கப் பால் இவற்றைக் கலந்து ஊற்றி உடன் நறுக்கிய வாழைப் பழத் துண்டுகளையும் போடவும்.
  • அடிப்பிடிக்காமல் இருக்க நன்கு கிண்டவும் பிறகு சற்று நேரத்தில் வெந்ததும் சர்க்கரையைப் போட்டு சிறிது நெய் விட்டுக் கிளறவும்.
  • நன்கு சுருள ஒட்டாமல் வந்த பதத்தில் இறக்கி வைக்கவும்.
  • இதோ சுவையான வாழைப்பழ அல்வா தயார்.

பின்குறிப்பு : பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் கேசரிப் பவுடரை போடலாம்.

பலன்கள்

உடல் எடை குறைவாக உள்ளவர்கள் அடிக்கடி வாழைப்பழத்தில் அல்வா செய்து சாப்பிட உடல் எடை கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக