அசுவினி:
- பூ முடித்தல்
- விவாகம்
- அன்னப்பிராசனம்
- பெயர் சூட்டுதல்
- உபநயனம்
- குதிரை வாங்குதல்
- வேதசாஸ்த்திர அப்பியாசம்
- பட்டாபிஷேகம் அல்லது பதவி ஏற்பு
- விதை விதைத்தல்
- தென்னை, பலா, மா முதலிய விருக்ஷங்கள் வைத்தல்
- யாத்திரை செய்தல்
- கிரகப்பிரவேசம்
- தானியம் வாங்க
- மாடு - கன்றுகள் வாங்க உகந்த நக்ஷத்திரம் இதுவே. இந்த நக்ஷத்திரம் வரும் நாளில் மேற்கண்டவற்றை செய்யலாம்.
பரணி:
- தீர்த்த யாத்திரைக்கு செல்லுதல்
- வீட்டில் அடுப்பு போடுதல்
- கத்திரிக்காய் விதை விதைக்க
- முட்ச்செடிகள் நடல் ஆகிய இவை அனைத்திற்கும் இந்த நக்ஷத்திரம் உகந்தது.
கிருத்திகை:
- ஹோமம் செய்ய
- சமையல் செய்ய
- தேவை இல்லாத மரங்களை வெட்ட
- சூளைக்கு தீயிட
- வாகனங்களை விற்க இந்த நக்ஷத்திரம் வரும் நாளை தேர்ந்தெடுத்து செய்யலாம்.
ரோகிணி:
- ருதுசாந்தி
- பூ முடித்தல்
- சீமந்தம்
- உபநயனம்
- வித்தியாப்பியாசம்
- கிரகப் பிரவேசம்
- கும்பாபிஷேகம்
- யாகம்
- நவக்கிரக சாந்தி
- வியாபாரம் முதலியவற்றை செய்யவும்
- கிணறு வெட்ட
- வாசக்கால் நாட்ட
- புத்தகங்கள் வாங்க
- கடன் வாங்க
- கடன் தீர்க்க இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
மிருகசீரிஷம்:
- விவாகம் செய்ய
- ருதுசாந்தி செய்ய,
- பூ முடித்தல்
- சீமந்தம் செய்ய
- பெயர் சூட்ட
- காது குத்த
- அன்னப்பிராசனம் செய்ய
- உபநயனம் செய்ய
- வித்தியாரம்பம் செய்ய
- ஆபரணம் வாங்கி அணிய இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
திருவாதிரை:
- சூளைக்கு நெருப்பு இட
- சிவபூஜை செய்ய இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
புனர்பூசம்:
- பூ முடித்தல்
- சீமந்தம்
- பெயர் சூட்ட
- முடிவாங்க
- காதுகுத்த
- வாஸ்து சாந்தி செய்ய
- கிரகப்பிரவேசம் செய்ய
- யாத்திரை செய்ய
- வியாபாரம் புது வஸ்திரம் வாங்க
- விவாகம், கும்பாபிஷேகம் செய்ய
- கப்பல் பிரயாணம் செய்ய இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
பூசம்:
- ருதுசாந்தி
- பூ முடித்தல்
- சீமந்தம் செய்ய
- பெயர் சூட்ட
- பசு வாங்க
- விவசாயம் செய்ய
- யாத்திரை செய்ய
- வாஸ்து சாந்தி செய்ய
- கரும்பு நட
- விவாகம் நடத்த
- குடிபோக
- இரத்தின நகைகள் சிரசில் அணிய இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
ஆயில்யம்:
- ஒரு ஜெபத்தை பூர்த்தி செய்ய
- நவக்கிரக சாந்தி செய்ய இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
மகம்:
- விவாகம் செய்ய
- மந்திரப்பிரயோகம் செய்ய
- விதை விதைக்க
- கதிரறுக்க
- சந்நியாசி மற்றும் தவசிகளை தரிசனம் செய்ய இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
பூரம்:
- அம்பாள் தரிசனம் செய்ய
- சித்திரம் எழுத
- மாடு வாங்க
- சூளை பிரிக்க இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
உத்திரம்:
- பூ முடித்தல்
- சீமந்தம் செய்ய
- அன்னப்பிராசனம் செய்ய
- உபநயனம் செய்ய
- விவாகம் செய்ய
- காதுகுத்த,
- பள்ளிக்கூடத்தில் சேர
- ஆபரணம் அணிய
- கிரகப்பிரவேசம் செய்ய
- விதை விதைக்க
- வெளிநாட்டுப் பிரயாணம் செய்ய இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
அஸ்தம்:
- ருதுசாந்தி செய்ய
- பூ முடிக்க
- சீமந்தம் செய்ய
- விருந்து உண்ண
- உபநயனம் செய்ய
- விவாகம் செய்ய
- விதை விதைக்க
- கிணறு வெட்ட
- நந்தவனம் வைக்க
- கிரகப்பிரவேசம் செய்ய இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
சித்திரை:
- பூ முடிக்க
- சீமந்தம் செய்ய
- உபநயனம் செய்ய
- விவாகம் செய்ய
- குதிரை வாங்க
- கிரகப் பிரவேசம் செய்ய
- கிணறு வெட்ட
- நந்தவனம் வைக்க இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
சுவாதி:
- பூ முடிக்க
- பெயர் சூட்டல்
- அன்னப்பிராசனம் செய்ய
- ஜோதிடம், வைத்தியம் ஆரம்பிக்க,
- புத்தகங்கள் பத்திரிக்கைகள் பிரசுரஞ்செய்ய
- நவக்கிரக ஜெபம் செய்ய
- விவாகம் செய்ய இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
விசாகம்:
- விவசாய தானியங்களை அறுக்க
- கிணறு தடாகங்களை சீர் திருத்தம் செய்ய இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
அனுஷம்:
- ருது சாந்தி செய்ய
- பூ முடிக்க
- காதுகுத்த
- உபநயனம் செய்ய
- ஆபரணம் வாங்கி அணிய
- கிரகப்பிரவேசம் செய்ய
- வாசக்கால் வைக்க
- கடவுள் சிலைகளை பிரதிஷ்டை செய்ய
- கதிர் அறுக்க
- அரசாங்க கடன் வாங்க
- விவாகம் செய்ய இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
கேட்டை:
- மந்திரங்களை கற்க
- கடனை அடைக்க
- வாஸ்து சாந்தி செய்ய
- கிணறு வெட்ட இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
மூலம்:
- ருதுசாந்தி செய்ய
- பூ முடிக்க
- சீமந்தம் செய்ய
- விருந்து உண்ண
- ஆபரணம் தரிக்க
- விவாகம் செய்ய
- பெயர் சூட்ட
- உபநயனம் செய்ய
- விதை விதைக்க
- கடன் தீர்க்க இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
பூராடம்:
- விவாசாயிகள் கரும்பு நட
- பழைய கிணறுகளை சீர்திருத்த
- புண்ணிய தீர்த்த யாத்திரைக்கு செல்ல இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
உத்திராடம்:
- பூ முடிக்க
- சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்ய
- விவாகம் செய்ய
- கிரகப் பிரவேசம் செய்ய
- கிணறு வெட்ட
- தூரதேச யாத்திரைக்கு செல்ல இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
திருவோணம்:
- ருதுசாந்தி செய்ய
- பூ முடிக்க
- பெயர் சூட்ட
- உபநயனம் செய்ய
- ஹோமசாந்தி செய்ய
- விதை விதைக்க
- விவாகம் செய்ய
- கடன் தீர்க்க இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
அவிட்டம்:
- பூ முடிக்க
- பெயர் சூட்ட
- திருமாங்கல்யம் செய்ய
- குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க
- மருத்துவரை பார்க்க
- உணவுப் பொருள்கள் மற்றும் தானியங்களை வாங்க இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
சதயம்:
- பூ முடிக்க
- குழந்தைகளுக்கு பெயர் சூட்ட
- உபநயனம் செய்ய
- வியாபார கணக்கு முடிக்க
- யாத்திரையை மேற்கொள்ள
- மாடு வாங்க,
- விதை விதைக்க இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
பூரட்டாதி:
- கவலையை மறக்க
- மந்திரம் ஜெபிக்க
- சாந்தி செய்ய
- செங்கல் சூளை பிரிக்க இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
உத்திரட்டாதி:
- ருதுசாந்தி
- பூ முடித்தல்
- சீமந்தம்
- பெயர் சூட்டல்
- காது குத்த
- யாத்திரை போக இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
ரேவதி:
எங்கள் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.
- ருதுசாந்தி செய்ய
- காது குத்த
- உபநயனம் செய்ய
- விவாகம் செய்ய
- விதை விதைக்க
- குளம், கிணறு வெட்ட
- குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
எங்கள் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக