Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

ஞாயிறு, 11 நவம்பர், 2018

மேம்பாலத்தில் நின்றால் மிதக்கும் அனுபவம் சிலிர்க்கும் குமரி மக்கள்!


மார்த்தாண்டத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தின் மீது பொதுமக்கள் நடக்கும்போது மிதப்பதுபோன்ற புதுமையான அனுபவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரத்தில் மேம்பாலங்கள் அமைக்க மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்தார்.  அதில் ரூ.142 கோடியில் பணிநடந்துவந்த மார்த்தாண்டம் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நிறைவுறும் தருவாயை எட்டிவிட்டது. இதை தொடர்ந்து மார்த்தாண்டம் மேம்பாலம் பொதுமக்கள் பார்வைக்காக இன்று மாலை 4 மணிமுதல் 7 மணிவரை திறக்கப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பொதுமக்களுடன் கலந்துகொண்டார். இரவு வரை லட்சத்தை தொடும் அளவிற்கு மக்கள் மேம்பாலத்தை பார்வையிட்டனர். மேம்பாலத்தில் நடந்து செல்லும்போது சிறு அதிர்வு ஏற்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதிலும் குழித்துறை தர்மசாஸ்தா கோயில் அருகில்  செல்லும்போது பாலத்தில் மிதப்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. இதனால் "பாலம் ஆடுகிறது" என பொதுமக்கள் கூறினர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை டிவிஷனல் இன்ஜினியர் தனசேகர் கூறுகையில், "மேம்பாலங்களை தாங்கும் பகுதியில் ஸ்பிரிங் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படிருக்கும். அப்படி அமைத்தால்தான் வாகனங்கள் செல்லும்போது பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாது. எனவேதான் நடந்துசெல்லும் மக்களுக்கு மிதப்பதுபோன்றும், பாலம் ஆடுவதுபோன்றும் உணவு ஏற்படும்" என்றார். "வகனங்கள் செல்லுவதற்கு மட்டுமே மேம்பாலம். மேம்பாலங்களில் பொதுவாக மக்கள் நடந்துசெல்ல அனுமதிக்கமாட்டார்கள். ஜாக்கப்சர் போன்ற வடிவமைப்பு உள்ளதால் இந்த உணர்வு ஏற்படுவதாகவும் மேம்பாலத்தை வடிவமைத்த கட்டுமான நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

எங்கள் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக