Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 9 நவம்பர், 2018

அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?






🌟 அன்னம் மனிதனுக்கு மிக முக்கியமானதாகும். அன்னாபிஷேக நாளான இன்று சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்கு தேவையான சந்திரனின் காரகம் பெற்ற அரிசி (பச்சரிசி) வாங்கி கோவிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது ஐந்து பேருக்கு அன்னதானம் செய்வது போன்றவை சிறந்த பலனை அளிக்கும். மேலும், சிவனுக்கு அன்னத்தை பூசி பூஜிப்பது ஏன் என்று தெரிந்துகொள்வோம்?

🌟 அன்னசூக்தத்தில் உள்ள மந்திரம் அன்னத்தின் தன்மையை எடுத்துச் சொல்கிறது. ஒருவன் என்னை (உணவு) நிறைய சாப்பிடத் தொடங்கினால் அவனை நான் சாப்பிட்டு விடுவேன், என்கிறது அந்த மந்திரம். கடவுளுக்குப் படைத்த பிரசாதம் ஆனாலும், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக்கூடாது. அன்னத்தை கடவுளாக உணர்ந்து அளவாகச் சாப்பிட வேண்டும். அன்னத்தை வீணாக்கக்கூடாது.

🌟 தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி பௌர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த அபிஷேகத்தை நடத்துவது மரபாக உள்ளது.

🌟 ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. தீயில் நீரும், நீரில் நிலமும் பிறக்கின்றன. நிலத்தில் விளைந்த அரிசி, நீரில் மூழ்கி, தீயால் வெந்து அன்னமாகிறது. எனவே, அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை. அன்னம், அபிஷேகத்தின் போது ஆண்டவனை முழுவதும் அணைத்துத் தழுவிக்கொள்கிறது. அவனிடமே அடைக்கலமாகிறது.

🌟 ஐம்பெரும் பூதங்களையும் தன்னுள் அடக்கி கொள்ளும் அன்னம் இறுதியில் இறைவனிடத்தில் சேர்கிறது.

🌟 அன்னத்தின் அருமையையும், பெருமையையும் புரிந்து அன்னத்தை வீணாக்கக்கூடாது என்பதற்காக அன்னத்தை சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக