Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 8 நவம்பர், 2018

ராகி அப்பம்



இரத்த விருத்தியை அதிகரிக்கும் ராகி அப்பம்

தேவையான பொருள்கள்:
ராகி மாவு 500 கிராம்
வெல்லம் 300 கிராம்
வாழைப் பழம் மூன்று 
ஏலக்காய் பொடி இரண்டு ஸ்பூன்
காய்ச்சிய பால் தேவையான அளவு 
முந்திரி 6 (உடைத்து வைத்துக் கொள்ளவும்)
துருவிய தேங்காய் கால் மூடி
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தேவையான அளவு 

செய்முறை:
ராகி மாவை நன்கு சலித்துக் கொள்ளவும்.
இப்போது நன்கு சலித்த ராகி மாவுடன் வெல்லம், வாழைப் பழம் ஆகிய இவை இரண்டையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். உடன் பால் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். (நீர்க்க இருத்தல் கூடாது. கவனம்)
இப்போது மேற்கண்டவற்றுடன் ஏலக்காய் பொடி, முந்திரிப் பருப்பு, துருவிய தேங்காய் ஆகிய இவை அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து ஒரு சிறு குழிக் கரண்டியில் மாவை நிரப்பி உள்ளே இட்டுப் பொன்னிறம் வரும் வரையில் நன்கு பொரிக்கவும் (மாவை ஊற்றும் சமயத்தில் பரவலாக தட்டை போல ஊற்ற வேண்டாம்)
இதோ இப்போது சுவையான ராகி அப்பம் தயார்.

ராகியில் கால்சியம் இருப்பதால், இது எலும்புகள் மற்றும் பற்களுக்கு மிகவும் நல்லது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக