சூரிய உதயமும், மறைவும் காண்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்.படத்தில் நீங்கள் காண்பது, பூமியின் வட துருவத்தில் நிகழும் சூரிய அஸ்தமனம். நிலாவுக்கு நேர்கீழே சூரியனைக் காணலாம்!! கொஞ்சம் பொறுங்க.. வட துருவத்தில் நிகழும் சூரிய அஸ்தமனம் உண்மையில் இப்படித் தான் இருக்குமா?இங்கு அலசுவோம்!
சூரிய உதயமும், மறைவும் காண்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். பூமியின் வட துருவத்தில் நிகழும் சூரிய அஸ்தமனம் இப்படித் தான் இருக்கும்!!
இதைக் காண கண்கோடி வேண்டும்... பார்த்து மகிழுங்கள்... படத்தில் நிலாவுக்கு நேர்கீழே சூரியனைக் காணலாம்!!
என்ன நண்பர்களே!! சூரிய அஸ்தமனம் எப்படி? ரொம்ப நல்லா இருக்கா!!
ஆனால், இது உண்மை இல்லை!!
ஏன்? மேலும் படிங்க!!
உண்மை
உண்மையில் இப்படி இது ஒரு புகைப்படமே அல்ல... ஒட்டுவேலையோ என்று நினைக்கிறீர்களா? அதுவும் இல்லை...
இது இங்கா நீல்சன் (Inga Nielsen) எனும் ஓவியரால் வரையப்பட்ட அழகிய ஓவியம்!!
(படத்தின் கீழே பாருங்கள்.. கருப்பு பட்டியில் அவர் பெயர் இருக்கும்!!)
இது நாசாவால் "இன்றைய வானியல் படம்" என்று 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது!!
இப்படி ஒரு காட்சி பூமியில் ஏற்பட வாய்ப்பே இல்லை..
சரி, அப்ப வடதுருவத்தில் சூரிய அஸ்தமனம் எப்படி இருக்கும்?
பூமியில் இருந்து பார்த்தால் சூரியனும், நிலாவும் கிட்டத்தட்ட ஒரே கோணவிட்டம் (Angular Diameter) உடையவை..
சூரியனின் கோணவிட்டம் = 14 லட்சம் கி மீ/ 15 கோடி கிமீ = 0.00903
சந்திரனின் கோணவிட்டம் = 3474 கிமீ / 3.84 லட்சம் கிமீ = 0.00905
இதனால் தான், சூரிய கிரகணத்தின் போது சந்திரன் சூரியனை முழுதும் மறைத்தாலும், சூரியனின் ஒளி வளையம் (Corona) நமக்குத் தெரிகிறது.
எனவே, அங்கும் நமக்குத் தெரிவது போலத் தான் இருக்கும்!!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக