கடலிலுள்ள உப்பையெல்லாம் எடுத்து
நிலத்தில் சமமாக பரப்பினால் எவ்வளவு உயரமாக இருக்கும் தெரியுமா? சுமார் 150
மீட்டர் உயரமாக இருக்கும்; அதாவது ஏறக்குறைய 45 மாடி கட்டடத்தின்
உயரத்திற்கு இருக்கும்! ஏராளமான ஆறுகளும் நன்னீர் ஓடைகளும்தானே கடலில்
கலக்கின்றன; அப்படியிருக்க இவ்வளவு அதிகமான உப்பு எங்கிருந்து வந்தது? அது
பல இடங்களிலிருந்து வந்து சேர்வதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதில் ஒரு இடம், நாம் நின்றுகொண்டிருக்கும் நிலமாகும். நிலத்திலுள்ள மண் வழியாகவும், பாறைகள் வழியாகவும் மழைநீர் கசிந்து செல்கையில் சில உப்புகளையும் அவற்றின் பாகமான இரசாயனங்கள் உட்பட சிறிதளவு தாதுப் பொருள்களையும் கரைத்துச் செல்கிறது. அந்த நீர், ஓடைகள், ஆறுகள் வழியாக கடலில் கலக்கையில் இந்த உப்புகளையும் எடுத்துச் செல்கிறது. ஆனால், நன்னீரில் உப்பின் சதவிகிதம் மிகவும் குறைவாக இருப்பதால் அது நமக்கு தெரிவதில்லை.

மற்றொரு இடத்திலிருந்தும் உப்பு வருகிறது; அதுவே, கடலுக்கு அடியிலிருக்கும் புவி மேலோட்டிலுள்ள தாதுப் பொருள்கள் ஆகும். கடல் தரையிலுள்ள வெடிப்புகள் வழியாக தண்ணீர் புவி ஓட்டிற்குள் செல்கிறது; அங்கு பயங்கரமாக சூடாக்கப்பட்டு, தாதுப் பொருள்களையும் தன்னோடு எடுத்துக்கொண்டு, கடலடி வெந்நீர் ஊற்றுகள் வடிவில் மீண்டும் வெளியே வந்து கடலோடு கலக்கிறது . இதுபோன்ற வெந்நீர் ஊற்றுகளில் சில, ஆழ்கடலில் உள்ளன.

இதற்கு நேர்மாறான ஆனால் இதே விளைவை ஏற்படுத்துகிற மற்றொரு நிகழ்ச்சியும் நடக்கிறது. அதாவது, கடலடியிலுள்ள எரிமலைகள் சூடான பாறைகளை ஏராளமாக கக்குகின்றன; இவ்வாறு வெளிவரும் பாறைகளில் உள்ள இரசாயனங்கள் கடல் நீரில் கலக்கின்றன . தாதுப் பொருள்கள் கடலுக்கு வரும் மற்றொரு வழி, காற்றின் மூலமாகும். இது நிலத்திலுள்ள துகள்களை கடலில் கொண்டுபோய் சேர்க்கிறது . இந்த அனைத்து வழிகளின் மூலமாகவும், பூமியில் அறியப்பட்டுள்ள எல்லா விதமான தனிமங்களும் கடல் நீரில் காணப்படுகின்றன. என்றாலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பாகிய சோடியம் குளோரைடுதான் மிக அதிகளவில் உள்ளது. கடல் நீரில் கரைந்துள்ள உப்புகளில் 85 சதவிகிதம் இதுதான்; கடல் நீர் உப்புக் கரிப்பதற்கான முக்கிய காரணமும் இதுதான்.
எங்கள் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக