கோடை காலம் என்றாலே மாங்காய் சீசன்தான். அதோடு நெல்லிக்காய் எப்போதும் கிடைக்கும். இவற்றைப் பயன்படுத்தி சுவையான ஊறுகாய் செய்யலாம்.
எப்படி என்று பார்ப்போமா?
தேவைப்படும் பொருட்கள்;
1. நெல்லிக்காய் – 20
2. பெரிய மாங்காய் – 1
3. மிளகாய்தூள் -2 டீஸ்பூன்
4. உப்பு – 11/2 டீஸ்பூன்
5. பெருங்காயத்தூள் ½ டீஸ்பூன்
6. கடுகு 1 டீஸ்பூன்
7. வெல்லம் –நெல்லிக்காய் அளவு
செய்முறை;
மாங்காய், நெல்லிக்காய் இரண்டையும் துருவிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளித்து, துருவி வைத்துள்ளதைப் போடவேண்டும்.
மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அது வதங்கிய பின்பு கொஞ்சம் வெல்லம் சேர்த்து கிளரிவிட்டு இறக்க வேண்டும். இப்பொழுது சுவையான நெல்லிக்காய் மாங்காய் தொக்கு ரெடி.
இதில் உள்ள மருத்துவ பயன்கள்:
நெல்லிக்காய் இதயத்தை வலுப்படுத்த உதவுகிறது.
நெல்லிக்காய் குடல்புண், கண்நோய்கள், இரத்தப்பெருக்கு, நீரழிவு நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது.
மற்றும் நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, சுண்ணாம்புச் சத்து, தாதுப் பொருள், இரும்புச்சத்து, வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் நிறைந்து உள்ளது.
மாங்காயில் வைட்டமின் ஏ நார்ச்சத்துக்கள் அதிகமாக கானப்படுகிறது. தோல் நோய் உள்ளவர்கள் மாங்காயை தவிர்ப்பது நல்லது. மாங்காயை நிறைய எடுத்துக் கொண்டால் உடலில் சூட்டை உண்டாக்கும். மாங்காய் பசியைத்தூண்டும் தன்மை கொண்டது.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக