Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 13 டிசம்பர், 2018

வாழைப்பழத்தை இப்படி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

ஒரு ஆப்பிளை விட அதிக கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ப்ரோட்டின் மற்றும் விட்டமின், நார்ச்சத்து, கொழுப்புச் சத்துக்கள் நிறைந்ததாகவும், மலிவான விலையில் எங்கும் கிடைக்கக் கூடிய பழமாகவும் திகழ்கிறது வாழைப்பழம். சாப்பிட்ட உடனேயே உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கக் கூடிய உணவுப் பொருட்களில் ஒன்றான வாழையை, உலகின் தலைசிறந்த தடகள வீரர்களும் உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ரத்தத்தில் உள்ள ஹீமோக்ளோபின் அளவை அதிகரித்து, உடலியக்கத்தை சீராகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும் இந்த வாழைப்பழம். எனவே இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தசோகை நோயே ஏற்படாது.


வாழைப்பழம்
வாழையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் அந்த நீரை குடித்தாலும் உடலுக்குள் அண்டியிருக்கும் வியாதிகள், பிரச்சினைகள் ஓடிவிடும். அதாவது வாழைப்பழத்தின் இரண்டு முனைகளையும் வெட்டி, நீரில் போட்டு பத்து நிமிடங்களுக்கு வேகவைத்து, பின்னர் அதில் இலவங்கப் பொடியை போட்டு ஆறவிட்டு, அந்த நீரை அப்படியே குடிக்க வேண்டும்.


மனச்சோர்வு:
இதனால் வாழைப்பழத்தின் தோலில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற கனிமச் சத்துக்கள் நமக்கு கிடைக்கும், இதனால் உங்களுக்கு மனச்சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும்.


தூக்கமின்மை: 
குறிப்பாக இரவில் தூக்கமின்மை வியாதியால் அவதிப்படும் பலருக்கும் பிரச்சினை தீரும். வாழைப்பழம் வேகவைத்த இந்த நீரை அருந்தினால் இரவுகளில் நல்லதொரு உறக்கத்தை பெறலாம்.


மோரீஸ்: 
எந்த வகையான வாழைப்பழத்தையும் இவ்வாறு எடுத்துக்கொள்ளலாம். பச்சை வாழை எனப்படும் மோரீஸ் பழத்தை உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக