Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 13 டிசம்பர், 2018

தாபா எக்ஸ்பிரஸ்

பல நேரங்களில் பசிக்கு நாம் சாப்பிடும் போது ருசி பார்ப்பதில்லை. அப்படி ஒரு அவசரத்தில் பசிக்காக சாப்பிடும் போது அவ்வுணவு ருசியாய் அமைந்துவிட்டால் அத்தருணம் அருமையானதாகிவிடும். மீண்டும் மீண்டும் அவ்வுணவகத்தை தேடிப் போக வைத்துவிடும்.

Photo0056 அப்படி ஒரு பசி வேளையில் போய் இம்பரஸ் ஆன உணவகம் தான் சென்னை செனடாப் ரோடில் உள்ள தாபா எக்ஸ்பிரஸ் என்கிற பஞ்சாபி உணவகம். இவர்கள் மதிய வேளையில் 80 ரூபாய்க்கு அன்லிமிட்டட் வெஜ் பப்பே.. அளிக்கிறார்கள். போனவுடன் நாக்கூறும் சூடான ஜிலேபி. ஜிலேபியை சூடாக சாப்பிட்டிருக்கிறீர்களா?  தேவாம்ரிதமாய் இருக்கும். அதன் பிறகு நான், பட்டர் நான், புல்கா, ரோட்டி என்று கலந்து கட்டி ரோட்டி அயிட்டங்கள், அதற்கு இரண்டு சைட்டிஷ்கள், ஒரு ட்ரை, ஒரு க்ரேவி, ஒரு டால், அது மட்டுமில்லாமல் ஒரு சைனீஷ் சைட்டிஷ், ஒரு பிரியாணி ரைஸ்,அல்லது புலாவ், நூடூல்ஸ், வெறும் சாதம், தயிர்சாதம், ஊறுகாய், Salad என்று வரிசை கட்டி நிற்கும் உணவுகள். ஒவ்வொன்றும் ஒரு சுவை. சாப்பிட்டு விட்டு ஒரு லஸ்ஸியும் ஸ்வீட் பீடாவும் போட்டால்.. ம்ம்ம்ம்ம். டிவைன். இவை ரெண்டும் பப்பேயில் வராது. என்பது ரூபாய்க்கு அருமையான லஞ்ச்.. என்ன குடிப்பதற்கு வெறும் பில்டர் வாட்டர் வைக்கிறார்கள். அதற்கு பதிலாய் நல்ல கேன் வாட்டரை கொடுக்கலாம்.
 Photo0055
இரவு வேளைகளில் பஞ்சாபில் உள்ள தாபாக்கள் போல கயிற்றுக் கட்டில் ஒரு சிறிய டேபிளில் வெட்ட வெளியில், பக்கத்தில் உள்ள செயற்கை நீரூற்றுக்கு பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடும் ஒரு சந்தோஷத்தை அனுபவித்து பார்த்தால் தெரியும். இதை தவிர ஏஸி ஹாலும் இருக்கிறது. இவர்கள் மதியத்தில் மட்டுமே வெஜ் பப்பே அளிக்கிறார்கள். இவர்கள் நான்வெஜ் பஞ்சாபி அயிட்டங்களும் பிரபலமானவை.. முக்கியமாய் முர்க் மசாலாவும் அட்டகாசமாய் இருக்கும்.



 மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக