வராக அவதாரம்
சடபாதபிராமணம், தைத்தர்ய ஆரண்யகம் மற்றும் இராமாயணம்போன்ற இலக்கியங்களில் இந்த அவதாரத்தினைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
வராகப் படிமம் என்பதை ஆதிவராகம், யக்ஞவராகம், பிரளய வராகம் என்று மூன்றாக பிரித்துள்ளனர். இந்த பிரிவு அதன் வடிவத்திற்கேற்ற படி பிரிக்கப்பட்டுள்ளது.
கோயில்களில்
ஏரான் எனும் இடத்தில் குப்தர்கள் காலத்து வராகப் படிமம் உள்ளது. இதுவே தற்போது இருக்கும் படிமங்களுல் தொன்மையானது.மாமல்லபுரத்தில் ஆதிவராக வடிவம் குடவரையாக செதுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருப்பது கிபி 7 மற்றும் கிபி8 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், திருப்பரங்குன்றம் ஆகியவற்றில் குடவரையாக உள்ளது. இவை பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்டதாகும்.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக