நான்
+2 படித்துவிட்டு, இஞ்சினியரிங்கிற்காக, எண்டிரன்ஸ் எக்ஸாமுக்கு தயாராகிக்
கொண்டிருந்தேன். பொதுவா எனக்கு அப்போது எதிர்காலத்துல, அப்படியாகனும்,
இப்படியாகனுங்கிற எண்ணம் எல்லாம் இல்ல, எங்க வீட்டில் என் அண்ணங்க யாரும்
காலேஜுக்கு போகாததால, என்னை எப்படியாவது இஞ்சினியர் ஆக்குவது என்று என்
அப்பாவின் முடிவாகயிருந்தது. சின்ன குழந்தைங்ககிட்ட எதிகாலத்துல நீ என்னவா
ஆகப்போறன்னு கேட்டா, டாக்டர்னு பட்டுன்னு எதையும் யோசிக்காம சொல்லுறது
மாதிரித்தான் நானும், இஞ்சினியராவேன்னு சொல்லிக்கொண்டிருந்தேன். அப்ப
எல்லாம் சத்தியமா எனக்கு செமஸ்டர், அரியர், பஸ்ட் கிளாஸ், புராஜெக்ட்,
பிராக்டிகல்..... இப்படியான டிபிகள்ஸ் இருக்குமுன்னு தெரியாது.
எண்டிரன்ஸ்
கிளாஸுக்கு போகனும்னு, என் நண்பர்கள் அனைவரிடமும் ஐடியா கேட்டு,
தென்காசியில் சேரலாமுன்னு முடிவுபன்னி, அப்பாகிட்ட சொல்லுறதுக்கு முன்னாடி,
என் அப்பா “நாளைக்கு சீக்கிரம் ரெடியாகு, கவுன்சிலிங் கு போகனும்”
என்னதுதுதுதுதுது கவுன்சிலிங்ஆஆஆஆஆஆஆ
சத்தியமா அப்போ எல்லாம் கவுன்சிலிங் னு பேர கேட்டாலே சும்மா உடம்புலம் நடுங்கும் ஆனா நானே இப்போ கவுன்சிலிங்கு போக ரெடி ஆகணும் சில பல பிரபல கல்லூரி எல்லாம் டவுன் ல தான் ஆனா இப்போ நாங்க அதுக்கு போகல எங்க அப்பாவோட பிரெண்டோட பிரெண்ட் எதோ அங்க எண்டிரன்ஸுக்கு வகுப்பு
எடுப்பதாகவும், சிறந்த ஆசிரியர்களின் சீறான மேற்பார்வையில், சிறப்பான
கல்வின்னு, ஏதோ ஒரு நாதாரி ரைமிங்க என் அப்பாகிட்ட சொல்ல, எங்கப்பாவும்,
நாம் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு சொன்னா, நம்ம புள்ளயாண்டான் நம்மள
பேசி சமாளிச்சி அங்க போகவேமாட்டான்னு தெரிஞ்சிகிட்டு, முயலுக்கு காலே
இல்லங்குற அளவுக்கு விடாப்பிடியாக நின்றதால, வேற வழிதெரியாம, ஒரு மாசம் தங்கிப்படிக்க, பெட்டிகட்டி பஸ்ஸுல
பயணித்துக்கொண்டிருந்தேன்.
பஸ்ஸுல
போகும் போது, ஜன்னல் ஓரமான சீட்டில் சாய்ந்துகொண்டு, இந்த சினிமாவுல
வருகின்ற மாதிரியான பிளாஸ்பேக். எங்க குடும்பத்தில், என் அண்ணன், என் அத்தை
மகன்கள், பெரியப்பா பையன், மற்றும் என் சொந்தத்தில் உள்ள அனைத்து
குடும்பத்தில் இருந்தும் யாராவது ஒரு ஆள், அங்கே படித்தவர்களாக இருப்பார்கள் நல்ல படிச்சு பெரிய ஆளாக இருப்பார்கள் என கனவுல நினைச்சுட்டு வந்தேன் பட் உண்மை என்னனா அங்க படிச்ச யவனும் பத்தாவது தாண்டவில்லை, அப்படியோரு
ராசியான பள்ளிக்கூடம் அது.
அவங்க,
அங்க படிக்கும் போது, நான் ரொம்ப சின்னபையன், என் அப்பா, என் அண்ணன்,
மற்றும் சொந்தகார பயலுகள பாக்குறதுக்கு என்னையும் அழைத்துக்கொண்டு,
திண்பதற்கு எல்லோருக்கும் ஏதாவது வாங்கிக்கொண்டு போவார்கள். சொன்னா நம்ப
மாட்டீங்க, உண்மையில், சேது படத்துல வருகின்ற சீன்மாதிரியே இருக்கும் (சேது
படம் பார்த்தபோது எனக்கு, இந்த சின்ன வயது ஞாபகம் தான் வந்தது),
எல்லோரையும் மொட்டையடித்து, தட்டுடன், ஒரு கைலியோடு
பார்க்கும்போது......என்னால தாங்கவே முடியாது. எங்கப்பா வந்ததும், எங்க
ஊருக்காரங்க வந்து, சாப்பாடு சரியில்ல, கொசு கடிக்குது, வாத்தியார்
அடிக்குறாருன்னு, எங்கப்பாவ வரசொல்லுங்கன்னு ஏகப்பட்ட புகார்களும்,
வீட்டுக்கு சொல்லியனுப்புற விசயங்களுமாய் இருக்கும். (எங்க குடும்பத்து
பசங்க, படிக்காம போனதுக்கு இந்த பள்ளிக்கூடம்தான் காரணம் என்று நான்
கண்டிப்பா சொல்லுவேன்).
அங்குள்ள
கொடும தாங்க முடியாம, இரவுல சுவர்யேரி குதித்து, வீட்டுக்கு ஓடி
வந்தவங்கள, அடியடின்னு அடிச்சு மறுபடியும் அங்கயே அனுப்பிவைக்கிறது,
வெங்காயத்தை நைத்து, அக்குளுக்குள்ள வைத்து, வேண்டுமென்றே காய்ச்சல்
வரவழைத்து ஊருக்கு வருவது. பள்ளிக் கூடத்துல இருந்து ஓடிவந்து,
அப்பாக்களின் அடியிலிருந்து தப்பிக்க, தாத்தாவிற்கு வடை, பஜ்ஜி வாங்கி
கொடுத்து நிலைமையை சமாளிக்க, அனைவரும் பரிதவித்த முகத்துடன் லைன் கட்டி
நின்னது...................எல்லாம் என் கண்முன்னாடி வந்து போனது.
நீங்களே சொல்லுங்க, இவ்வளவு பெரிய ட்ராஜடியான பிளாஸ்பேக்க வச்சிகிட்டு, என்னால எப்படி அங்க படிக்கமுடியும்???????.
அப்ப
எங்களுக்குன்னு (என் கேஸ் மாதிரி, அங்கும் எங்க ஊருக்காரங்க 10 பேரு
இருந்தாங்க) இருந்த ஒரே ஆறுதல் அது, அந்த பள்ளிய அடுத்தது , மெடிக்கல்
காலேஜ் லேடீஸ் ஹாஸ்டல் மட்டும் தான். காலையில் கூட்டம், கூட்டமாக பொண்ணுங்க
எல்லாம் போகும், ஆனா நல்ல பிகரா, இல்லா சொத்த பிகரான்னு பாக்குரதுக்கு
சுவர் ஏறித்தான் குதிக்கனும். என்னடா வாழ்க்க இது, விதி இப்படி, ஸ்டம்ப
ஊனி, பேட், பாலுடன் கிரிகெட் விளையிடுறேன்னு எண்ணி ரொம்ப கான்டாயிடுச்சி.
என் அண்ணன்மார்களோட காலத்தில் ஏற்பட்ட கொடுமையை விட, இது பெருங்கொடுமையா
இருக்கேன்னு வாழ்க்கையை வெறுத்து, விட்டுட்டு போன ஒரே வாரத்துல, ஐயா, பேக்
டு பெவிலியன்.
நான்
ஏதோ செய்யாத குற்றத்த சென்ஞ்ச மாதிரி என் அப்பா, எண்ரன்ஸ் எக்ஸாம்
முடிஞ்சு, ரிசல்ட வரும் வரை எங்கிட்ட பேசவேயில்லை. இப்ப நினைக்கும் போது
கொஞ்சம் வருத்தம்தான் எனக்கு, ஆனா அந்த நேரத்துல அது ரொம்ம வசதியா
இருந்திச்சு. நான் நினைத்த இடத்துலயே படித்தேன், சினிமாவிற்கு போனேன்,
நல்லா ஊர் சுத்தினேன், கிரிகெட் விளையாடினேன்..... ஆனா புத்தகத்த மட்டும்
தொடவேயில்ல.
ரிசல்ட்
வந்ததும் மார்க்க பார்த்துவிட்டு (அடிங்ங்க..., யாருடா அவன்..., மார்க்
எத்தனன்னு கேட்கிறது?), என் அப்பா சொன்னது, “என் பேச்ச கேட்டிருந்து படிச்சிருந்தா................., இன்னும் நல்ல மார்க்
வாங்கியிருந்திருப்பான்”.
அந்த வசனத்த கேட்டுவிட்டு நான் சொன்ன பஞ்ச் டயலாக் (எங்கப்பா போனதுக்கு அப்புறம் தான்) என்னனு தெரியுமா???
.
.
எங்க படிக்கிறோம்ங்குறது முக்கியமில்ல,
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக