தயிரை வைத்து சற்று வித்தியாசமாக தயிர் ரசம் எப்படி செய்வதென்று பார்ப்போம் ! எளிதான ரெசிபி இது !
தேவையான பொருள்கள் -
- கெட்டித் தயிர் - 1 கப்
- தண்ணீர் - 1/2 கப்
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிது
- மல்லித்தழை - சிறிது
- துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி - 1 தேக்கரண்டி
- மிளகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
- மிளகாய் வத்தல் - 1
- கடுகு - 1 தேக்கரண்டி
- காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை -
- துவரம் பருப்பு, கொத்தமல்லி, மிளகு, சீரகம் எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
- தயிர், தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, பொடித்து வைத்துள்ள பொடி எல்லாவற்றையும் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கடுகு, காயத்தூள் போடவும்.
- கடுகு வெடித்தவுடன் தயிர் கலவையை ஊற்றி கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்க்கவும்.
- நுரை கூடி வரும் போது அடுப்பை அணைக்கவும். சுவையான தயிர் ரசம் ரெடி
மேலும்
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற
SUBSCRIBE செய்து
கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக