Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 17 டிசம்பர், 2018

காலண்டர் பற்றி நாம் அறிந்ததும் அறியாததும் இப்பதிவில் காணலாம்




காலண்டர் என்று நம் நினைவுகளில் வந்து செல்வது என்னவென்றால், அதில் பெரியவர்களாயிருப்பின் முக்கியமான நாட்கள் மற்றும் விழா வைபோகம் பற்றி நினைவுக்கு வரும். அதுவே, சிறியவர்களாயிருப்பின் விடுமுறை எப்பொது கிடைக்கும் என்று நினைப்போம். காலண்டர் என்றவுடனே, முக்கியமான விழாக்கள், விடுமுறை தினங்கள் மற்றும் நாட்டின் சில சிறப்பான விசயங்களை தன்னுள்ளே அடக்கி வைத்துள்ள ஒரு அற்புதமான சாதனம். அதுமட்டுமல்லாமல், எந்த தினத்தில் இருக்கிறோம் என்பதை நினைவுபடுத்துகிற சாதனம். அதை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இதில் காண்போம். வாருங்கள்.

காலண்டர்

காலண்டர் இந்த பெயர் எதிலிருந்து வந்தது தெரியுமா? கலேண்டே(மாதத்தின் முதல் நாள் அல்லது கணக்கு கூட்டுவது) என்ற இலத்தீன் மொழியில் இருந்து வந்தது.

நாம் பயன்படுத்தும் இந்த காலண்டர் எந்த வகையை சார்ந்தது தெரியுமா? இது கிரிகோரியன் காலண்டர். இதை அறிமுகப்படுத்தியது, அப்போதைய கத்தோலிக் தேவ ஆலயத்தில் உள்ள போப் கிரிகோரி 13 என்பவர் 1582 ல் அறிமுகப்படுத்தினார். இதற்கு முன்பு ஜூலியன் காலண்டரை பயன்படுத்தி வந்தனர்.



முதன் முதலில் எகிப்தியர்கள் தான் காலண்டரை பிரபலபடுத்தினார். இதை அவர்கள், தங்களுடைய விவசாயம், அறுவடை போன்ற விசயங்களை அறிந்து கொள்வதற்காகவும், நினைவில் வைக்கவும் காலண்டரை பயன்படுத்தி வந்தனர்.

இந்த உலகில் கிரிகோரியன் காலண்டர் மட்டும் இல்லை. முழு உலகிலும் ஏழு வகையான காலண்டரை பயன்படுத்திவருகின்றனர். அதில் சைனீஸ் காலண்டர், ஹீப்ரு காலண்டர், இஸ்லாமிக் காலண்டர், தமிழ் காலண்டர், பெர்சியன் காலண்டர், எத்தியோப்பியன் காலண்டர் மற்றும் பாலினீஸ் பௌகோன்.

நம்முடைய முன்னோர்களின் காலத்தில், மாதத்தை எவ்வாறு கணக்கிட்டார்கள் என்றால், நிலவு பூமியை சுற்றும் நேரத்தை மாதத்தின் ஒரு நாளாக கணக்கிடப்பட்டது. இவ்வாறு 29 நாட்கள் அரை நாள் என்பது ஒரு மாதமாக கணக்கிடப்பட்டது.



மாதம்

மாதம் என்ற ஆங்கிலச் சொல் மன்த்என்பது, நிலவின் ஆங்கிலச் சொல்(மூன்)லிருந்து திரிந்து வந்தது.

நமது இந்த கிரிகோரியன் காலண்டரில் செப்டம்பர்,அக்டோபர், நவம்பர், டிசம்பர் என்ற மாதங்கள் ரோமன் காலண்டரிலிருந்து வந்தது. அதாவது, ரோமனில் செப்டம் என்றால் ஏழு என்று அர்த்தம், அக்டோ என்றால் எட்டுஎன்றும், நவம்ப் என்றால் ஒன்பதுஎன்றும்
 டிசம்ப் என்றால் பத்து என்றும் அர்த்தம். அதனால்தான், 7,8,9,10 மாதங்களுக்கு இப்பெயர் வந்தது


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக