Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 26 டிசம்பர், 2018

ஆரா என்னும் புது புரளி.......

Image result for ஆரா

ஆரா பற்றி  ஏன், எதற்கு, எப்படி என்ற பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்தாளர் சுஜாதா அவர்களால் சொல்லப்பட்ட பதில். சுஜாதா அறிவுஜீவியா என்பதல்ல இங்கே பிரச்சனை ஆனால் ஒரு கேள்விக்கு தான்தோன்றிதனமா சுஜாதா பதில் சொல்லமாட்டார் என நம்புகிறேன்

மனிதர்கள் வெப்ப இரத்த பிராணிகள், அவர்கள் உடலுக்கு ஒரு குறிப்பிட்ட வெப்பம் நிலையாக இருக்க வேண்டும், அதனால் தான் அதிக வெப்பத்தில் நம் உடல் வியர்த்து வெப்பத்தை சீராக வைக்கிறது, அதிக குளிரில் நம் உடல் நடக்கி வெப்பத்தை சீராக வைக்கிறது, அதிக வெப்பத்தை தாங்க முடியவில்லையென்றால் உடல் டிஹைட்ரேட் ஆகி ஹீட்ஸ்ட்ரோக் ஏற்பட்டு இறக்கக்கூடும், அதிக குளிரை தாங்க முடியவில்லையென்றால் ஹைப்போதெர்மியா ஏற்பட்டு இறக்கக்கூடும்

நம் உடல் வெப்பத்தை அல்ட்ராவயலட் கேமரா அல்லது ஹீட் சென்சார் மூலம் பார்த்தால் புறசூழலுக்கு தனியே நம் உடல் தெரியும், அவ்வாறு வெப்பமாக இருக்கும் நம் உடலில் இருந்து வெளிப்படும் வெப்பகதிர்களை தான் ஆரா என பெயரிட்டு வைத்துள்ளார்கள் ஆன்மீகவாதிகள். ஆரா என்பதை 100% டுபாக்கூர்னு சொல்றதுக்கு முக்கிய காரணமே அதை ஆன்மா, ஆன்மீகம்னு இணைத்தது தான்.

ஏன் ஆன்மீகம் இருக்கக்கூடாதா? நான் உணர்ந்தேன் என்று கூட சிலர் சொல்கிறார்களே என்றால், ஆம் நான் கடவுளை பார்த்தேன் என்று கூட தான் சிலர் சொல்கிறார்கள். பேயை பார்த்தேன் என்று கூடத்தான் சிலர் சொல்கிறார்கள். உங்கள் மண்டையில் இது தான் உண்மை என நம்பவைத்து விட்டால் உங்களால் அதை ஆராயமுடியாது, முன்முடிவுகள் அதை அப்படியே நம்ப வைக்கும்

மருத்துவ குறிப்புகளை பொறுத்தவரை ஆரா என்பது ஒரு உள்ளுணர்வு. ஒரு வித எச்சரிக்கை உணர்வு. இதை பண்ணாதே, அங்கே போகாதே என உங்கள் உள்ளுணர்வு எச்சரிப்பதே ஆரா என மருத்துவம் அழைக்கிறது. அதை ஆன்மீகத்தோடு சிலர் இணைத்து கல்லா கட்டுகிறார்கள், அந்த எச்சரிக்கை உணர்வு நம் மூளையில் பல செயல்களுடன் ஒப்பிட்டு தரும் முடிவு, நம் மூளையின் வேகம் பல ஆயிரம் கணிணிகளுக்கு இணை என்பதால் நம்மால் உணரும் முன்பே முடிவு வந்து நிற்கும்

நம் ஆராவால் பிறர் பிரச்சனைகளை உணரமுடியுமா? நாம் போனில் பேசும் விதத்தை வைத்தே நாம் பிரச்சனையில் இருக்கிறோம் என்பதை நம் நெருங்கிய நண்பர்களால் உணர முடியும், நம் உடல்மொழியை கொண்டே நம் உடலுக்கு எதோ பிரச்சனை என்பதை உணரமுடியும், மருத்துவர்கள் சோதிக்கும் பொழுது கண்ணை நன்றாக விரித்து பார்ப்பது, நாக்கை வெளியே நீட்ட சொல்லி பார்ப்பது கூட உடலில் என்ன பிரச்சனை என்பதை அறியும் வழி தான்.

யோகா என்பது ஒரு உடற்பயிற்சி, ஆனால் அதில் குண்டலினி, குஷ்பு இட்லி என கல்லா கட்டும் சாமியார்கள் கல்லா கட்ட வைத்திருக்கும் இன்னொரு சப்ஜெக்ட் தான் ஆரா, தீவிர ஆன்மீகவாதிகள் அதன் உண்மை தன்மையை அறிய முடியாது, ஏன்னா கடவுள்னு ஒன்னு இல்லைன்னு சொன்னா நம்மை பைத்தியகாரன் மாதிரி தான் பார்ப்பார்கள், அப்படி தான் இதுவும்

பெருவெடிப்பு எப்படி தோன்றியிருக்கும் என சிந்திக்கும் போது இறுதியில் என் உடல் ஆர்கஸம் அடைந்தது போல் உணர்ந்தது, அது ஒன்றை கண்டுபிடித்தேன், அதை கற்பனையில் உணர்ந்தேன் என்ற எல்லையில்லா மகிழ்ச்சி உணர்வு, அதுக்காக நானும் சாமியார்மடம் ஆரம்பித்தால் என்னை விட ஏமாற்றுகாரன் யாரும் இருக்கமுடியாது. நீங்கள் உணர்ந்ததாக சொல்லிக்கொள்ளும் ஆரா அப்படி ஒரு நிலை தான், பகுத்தறிவு கொண்டு ஆராயாமல் எதையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்
 
 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக