1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் நாள் பாகிஸ்தான் தனி நாடாக சுதந்திரம் பெற்றது. அதற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா தனி நாடாக சுதந்திரம் பெற்றது.அடிமையாக இருந்த போதிலும் ஒன்றாக இருந்த ஆசியாவின் பெரும் பகுதி, அன்று தனித்தனியாக புரிந்து தனி தேசங்களாக உருவாகின.
இந்த பிரிவினை போது, பாகிஸ்தானில் இருந்த பெரும் பகுதி மக்கள் இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்த பெரும்பகுதி மக்கள் பாகிஸ்தானிற்கும் இடமாற்றமாகி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதுவரை தாங்கள் வசித்த வீடு, நிலம், உறவுகள், சொந்தங்கள் என அனைத்தையும் பிரிந்து உயிரை ஆங்காங்கே விடுத்து வெற்றுடலாய் இரத்தக் கண்ணீருடன் பயணிக்க துவங்கினர் மக்கள்.
இந்த பிரிவினை காரணத்தால் பெருமளவில் பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்பட்டது. பலர் இந்த பிரிவினை பயணத்தின் இடையே மரணம் அடைந்தனர். பல பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகினர். ஏறத்தாழ இடம்பெயர்ந்து செல்ல பயணித்தவர்கள் 1.8 கோடி எனில், அதில் 1.4 - 1.5 கோடி என்ற எண்ணிக்கையிலான மக்கள் தான் உயிருடன் இடம்பெயர்ந்து சென்றனர். மற்ற 35 இலட்சம் பேர் என்ன ஆனார்கள், எங்கு போனார்கள் என்பது விடை தெரியாமல் போனது.
இந்த பிரிவினை தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு நல்லுறவு ஏற்படாமல் மனக்கசப்பு உருவாக ஆரம்பப் புள்ளியாக இருந்தது என்றும் கூறலாம்...
புதியதோர் விடியலை தேடி, இலட்சக்கணக்கான மக்கள் மேற்கொண்ட வாழ்க்கை பயணம்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
பயணத்தின் நடுவே தங்கள் மகனை இழந்து, அடக்கம் செய்து பயணத்தை தொடரும் இளம் தம்பதி...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
வீட்டை இழந்து, உறவுகளை இழந்து சோகத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நெஞ்சங்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
கவலைக்கிடமாக கிடக்கும் தாயின் அருகே செய்வதறியாது தவிக்கும் சிறுமி...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
கலவரம், உணவு பற்றாக்குறை, உடல் சத்து குறைவு, என பல காரணத்தால் பிரிவினையின் போது இறந்த பலரது உடல் கூட்டாக சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட போது...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
பசியில் தாயின் மார் என நினைத்து அவள் அணிந்திருக்கும் சட்டையை உறிஞ்சி பால் தேடும் பச்சிளம் குழந்தை...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
இறந்த உடல்களை கொத்தி திங்கும் ராஜாளி கழுகுகள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
உடல் சோர்வடைந்த தன் மகளை தோள் மீது தூக்கி செல்லும் உடலில் வலுவில்லாத தந்தை...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
ரயில்வே தண்டவாளத்தின் அருகே சோர்வுற்ற நிலையில் கிடக்கும் மக்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
அடக்கம் செய்ய ஆளின்றி, புழுதிக் காற்றில் புதைந்துக் கொண்டிருக்கும் உடல்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
குளங்களில் தூக்கி வீசப்பட்ட இறந்த உடல்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
இடிபாடுகளில் சிதைந்த நிலையில் பகுதி...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
ஏறத்தாழ மரணத்தின் வாசலில் விழுந்து கிடைக்கும் உயிர்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
அறியப்படாத எதிர்காலத்தை நோக்கி, தலைவிதியை நொந்து கொண்டு நகரும் கூட்டம்..
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
கூட்டம், கூட்டமாக ரயிலில் அடைத்து ஏற்றி அழைத்து செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
வயதான மூதாட்டியை தூக்கி செல்லும் மகன்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
இலட்சக்கணக்கான மக்களை ஏதோவொரு நம்பிக்கையில் ஏற்றி செல்லும் வடமேற்கு ரயில்வே தொடர் வண்டி...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook!
பசியின் கொடுமையில் இறந்த முதியவர்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
வயதான தாயை தோளில் சுமந்து செல்லும் மகன்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
பயணத்தின் நடுவே இருப்பதை வைத்து தன் குடும்பத்திற்கு சமைத்து கொடுக்கும் தாய்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
அருந்த சொட்டு நீர் கூட இன்றி, வாடி கொண்டிருக்கும் பச்சிளம் குழந்தை...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
சோர்வின் காரணத்தால் மூட்டு வலுவிழந்து கிடக்கும் முதியவர்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
கலவரத்தின் காரணத்தால் சாலைகளில் இறந்து கிடக்கும் மக்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
புதிய தேசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் மக்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
தண்டவாளத்தில் உயிரிழந்து கிடக்கும் முதியவர்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
பிரிவினை காரணத்தால் தன் எதிர்கால நிலையை நினைத்து குழப்பமான சூழலில் இருக்கும் சிறுவன்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களுக்கு தோன்றிய கருத்துக்களை நீங்கள் தாராளமாக பதிவிடலாம்
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக