Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 1 ஜனவரி, 2019

காசியில் அஸ்தியை கரைப்பது ஏன் ?







உடலை காசி கங்கைக்கரையில் எரித்தால் இறந்தவர் சொர்க்கலோகம் செல்வர் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் அஸ்தியை காசிக்கு எடுத்து சென்று கங்கையில் கரைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இவ்வளவு ஈர்ப்பிற்கும் காரணம் ஒருகாலத்தில் இம்மயானத்தை அரிச்சந்திரன் காவல்காத்து விஸ்வநாதரின் நேரடி ஆசியுடன் வரம்பெற்றது தான். இதனால் பூலோகத்தில் உள்ள அனைத்து மயானங்களையும் அரிச்சந்திரன் தான் காவல் காக்கிறார் என்ற நம்பிக்கை பலரிடத்திலும் உள்ளது.


இதன்படி ஒவ்வொரு மயானத்திலும் அரிச்சந்திரனுக்கு கோயில்கள் அமைத்து அவருக்கு அபிஷேகம் செய்து ஆசீர்வாதத்துடன் அனுமதி பெற்றே மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு ஈமச்சடங்குகள் செய்யப்படுகின்றன. இந்துவாக பிறந்த அனைவராலும் காசிக்கு சென்று தகனம் செய்ய முடியாது என்பதால் அந்தந்தப்பகுதி மயானத்தில் அரிச்சந்திர கோயில்கள் எழுப்பப்பட்டன. இங்கு காசியில் நடப்பது போன்றே பிணம் எரியூட்டப்படும். இருப்பினும் காலமாற்றத்தில் இதுபோன்ற ஆலயங்கள் மயானத்தில் காணப்படுவதில்லை. அரிச்சந்திர வழிபாடும் நடைபெறுவதில்லை.


ஆனால் சம்பிரதாயமாக இன்னமும் இதற்கான காரியங்கள் நடைபெற்றே வருகின்றன. அதாவது ஒரு கருங்கல் அருகே சடலத்தை வைத்து அதனை அரிச்சந்திரனாக பாவித்து விபூதி, சந்தனம் திலகமிடப்படும். பின்பு மாலை சாற்றி ஆராதனை நடைபெறும். தொடர்ந்து மயான ஊழியர், ஒருவர் இறந்தால் அவர் எங்கு செல்வார், ஆன்மாவின் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறுவார்.


ஒருமனிதன் இறந்தபிறகு 13,14,15,16ம் நாளில் அவரது ஆன்மா இறைவனை அடையவேண்டும். தனக்கு முன்பு இறந்த 7 தலைமுறையினருடன் இணைந்து சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு ஈமக்காரியங்கள் செய்யப்படும். இருப்பினும் இன்றைக்கு மயானங்கள் பல்வேறு வகையில் மேம்பட்டுவிட்டன. மின்மயானங்களாக அரைமணிநேரத்தில் உடலை எரித்து சாம்பலாக்குகின்றன. இதனால் மேற்கண்ட பல்வேறு வழிபாட்டு முறைகள் மறைந்து வருகின்றன. இருப்பினும் பின்தங்கிய மாநிலங்களிலும், பல்வேறு கிராமங்களிலும் இதுபோன்ற வழிபாடுகளும், நம்பிக்கைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக