Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 29 ஜனவரி, 2019

சிவில் இன்ஞினியர்னா என்னனு கேளேன்........மச்சி நீ கேளேன்!!!!!



பொதுவா நமக்கு, நாம சார்ந்திருக்கக் கூடிய துறைபற்றி யாராவது ஒரு சின்ன கமெண்ட் 
அடிச்சாலும் நம்மால தாங்கிக்க முடியாது. இது காலேஜிலேயே ரொம்ப நடக்கும். என் எலக்டிரிகல் 
நண்பன் என்னை கொத்தனாருன்னு சொல்லுரதும், அவன நான் வயர்மேன்னு சொல்லுரதுமா 
சண்ட ஆரம்பம் ஆகும். பிறகு என்ன அவன் என்ன அடிக்க, நான் அவங்கிட்ட 
திருப்பி அடிவாங்கன்னு சாதா சொந்தம், ரத்த சொந்த்ததில் முடியும்.

சிவில் இன்ஜினியர் எப்போதுமே ரொம்ப ரொம்ப சிறப்பு, எப்படிங்கிறீங்களா?,

சொர்கத்துல இருக்குறவங்களுக்கும், நரகத்துல இருக்குறவங்களுக்கும் நடந்த பேச்சிவார்த்தயின் 
இறுதியில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது. அது என்னன்னா

சொர்கத்துல சேட்ட பண்ணுர சேட்டக்காரங்களை நரகத்துக்கும், நரகத்துல நல்லா புள்ளையா 
இருக்குறவனுங்களை சொர்கத்துக்கும் மாத்தும் போது, பல மைல் தூரம் சுத்தி கடந்து போவது
 சிரமமாக இருப்பதால், இரண்டிற்கும் இடைப்பட்ட 200 கி,மீல் பாலம் போடுவதற்குண்டான 
தீர்மானம் தான் அது.

அதில், 100 கி,மீ சொர்கத்துக்காரங்க போடனும், மிச்சமுள்ள 100 கி.மீ தூரத்தை நரகத்துல 
உள்ளவங்க போடுவாங்கன்னு பேசிமுடிவாகுது. 6 மாதம் டைமும் கொடுக்கப்படுகின்றது.
6 மாசம் முடியுது.

தீர்மானத்தின் படி, சொர்கத்துல இருக்கின்றவர்கள் தங்களுடைய பங்கான 100 கி.மீட்டரை 
முடிச்சபின்னாடி பார்த்தா, நரகத்துல ஒரு இம்மியளவும் பாலம் ஆரம்பிக்காம இருந்தது கண்டு, 
சொர்கத்தின் தலைவருக்கு சரியான கோபம்.

இதவிசாரிக்க மறுபடியும் சபை கூடுச்சு,

கோபத்துல சொர்கத்துக்காரங்க எல்லோரும், நரகத்து தலைவரை கட்டி ஏற, ந.தலைவர் வாய 
திறக்காம நின்னாரு.

சொ.தலைவர் ஒழுங்கு மரியாதையா காரணத்த சொல்லலைனா நடக்குறதே வேரன்னு மிரட்ட, 
கடைசியா வாயத்திறந்தார் நரகத்துத் தலைவர்.

“நாங்களும் இந்த 6 மாசத்துல எங்க நரகத்துல தேடாத இடமில்ல, கேட்காத ஆள் இல்ல, 
ஆனா, ஒரு சிவில் இஞ்சினியரக் கூட கண்டுபிடிக முடியல நாங்களும் இன்னைக்கு யாராவது 
வந்திருவான், நாளைக்கு யாராவது வருவான்னு எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்த்து போனதுதான் 
மிச்சம். னு சொல்லி பாவம் கண்ணுல தண்ணிவச்சுண்டார்.

தன் ஆதங்கத்தை கதறி கதறி சொன்னதுகேட்டு. சொர்கத்து தலைவரே மனசு இறங்கி
 “சரி மிச்சமுள்ள தூரத்தையும் நாங்களே போட்டுத்தருகின்றோம்னு ஆருதலா சொல்லி 
அனுப்பிவச்சார்.
.

இத கேட்டும் சிவில் இஞ்சினியர்கள் தான் சிறந்தவர்கள்னு ஒத்துக்க முடியலையா, அப்ப இதயும் 
கேளுங்க

மூணு சிவில் இன்ஜினியர்ஸ் ஒரு மீட்டிங்கிற்காக சென்னையில் இருந்து, டெல்லிக்கு போகுறதுக்கு 
டிக்கெட் வாங்குறதுக்கு வரிசையில் நிற்கும் போது, இதுமாதிரியான வேற ஒரு மீட்டிங்கிற்காக 
மூணு வக்கீல்களும் போறங்க. அவர்களுடன் நட்பு ஏற்படுகின்றது.

முதலாவதாக, அந்த மூணு வக்கீல்களும் ஆளுக்கு ஒரு டிக்கெட் எடுக்க, மீதமுள்ள மூணு 
இன்ஜினியர்களும் சேர்ந்து ஒரு டிக்கெட் எடுக்க, வக்கீல்களுக்கு ஆச்சர்யம்,

என்ன சார் நீங்க மூணு பேரு, ஆனா ஒரு டிக்கெட் மட்டும் எடுத்திருக்கீங்க?

அதுக்கு நம்மாளு “போதும் ஸார் பார்த்துக்கலாம்

எப்படி சார்?

ரயில்ல எங்க கூடத்தான வர்ரீங்க, பாருங்க புருஞ்சிவிக்கீங்கன்னு சொல்லிட்டு, வண்டியில் ஏற
வக்கீல்கள் மூவரும் அடித்து பிடித்து கிடைத்த இடத்தில் இருந்தாலும், அவங்க மனசு பூராவும், 
அந்த மூணு பேரு என்ன செய்யுரானுங்கன்னு பார்த்துக்கிட்டே இருந்தது.

டிக்கெட் செக்கர் வந்து, டிக்கெட் கேட்கும் நேரமா பார்த்து, அவருக்கு தெரியாம இன்ஜினியர்ஸ் 
மூவரும் பாத்ரூமில் முட்டிக்கொண்டு நின்று கதவடைகின்றார்கள்.

அந்த வழியாக வந்த பரிசோதகர், கதவைத் தட்ட

உள்ளே இருந்து ஒரே ஒரு கை மட்டும், அந்த ஒரு டிக்கெட்டுடன் வெளிவர, டிக்கெட்டை வாங்கி 
சரி பார்த்துவிட்டு கிளம்புகின்றார். இதைக் கண்ட வக்கீல்களுக்கு ஒரே அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்.

டெல்லியில் மூண்று நாள் இருந்துவிட்டு, அந்த வக்கீல்கள் மீண்டும் சென்னைக்கு வரும் சமயத்தில், இரயில்வே ஸ்டேசனில் மறுபடியும் அதே மூண்று சிவில் இன்ஜினியர்களை சந்திக்கின்றனர்.

வக்கீல்களுக்கு ஒரு யோசனைவர, அவர்களது பார்முலாவையே நாமளும் கடைபிடிக்கலாம் என்று 
கூடி பேசி, ஒரே ஒரு டிக்கெட் எடுக்கின்றார்கள்.

ஆனால், இந்த முறை இஞ்சினியர்களின் பார்முலாவில் மாற்றம், ஆம், அந்த ஒரு டிக்கெட்டை 
கூட எடுக்காமல், மூணு சிவில் இன்ஜினியர்களும் ரயில் ஏற, வக்கீல்கள் மூவருக்கும் பைத்தியமே
புடிச்சிருச்சி.


என்ன ஸார் இது, ஒரு டிக்கெட் கூட எடுக்கல, எப்படி?

அது அப்படித்தான், பார்த்துக்கலாம்.

இல்ல எப்படின்னு தெரின்ஞ்சிக்கல்லாமுன்னு........?

ரயில்ல எங்க கூடத்தான வர்ரீங்க, புருஞ்சிவிக்கீங்கன்னு சொல்லிட்டு, வண்டியில் ஏற,

இஞ்சினியருக்களுக்கு முந்திக்கொண்டு ஒரு பாத்ரூமில் வக்கீல்கள் மூவரும் பதுங்க, சிறிது நேரம் 
விட்டு, பொறுமையாக அதற்கு எதிர்தாப்புல இருந்த மற்றொரு பாத்ரூமில் பதுங்குவதற்கு முன்பு, 
ஒரு சிவில் இஞ்சினியர் மட்டும், வக்கீல்கள் இருந்த பாத்ரூம் கதவை தட்ட,

டக், டக், டக்.....

உள்ளே இருந்து ஒரே ஒரு கை மட்டும், டிக்கெட்டுடன் வெளியில் வந்தது!!!!!!!!!!!!

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்எங்களின்
 கருத்துகளில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக