Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 19 ஜனவரி, 2019

சுடு தண்ணீர் குடிப்பதால் உடலுக்குள் ஏற்படும் நன்மைகள்


நாம் தண்ணீர் குடிப்பது நம்முடைய உடலுக்கு நல்லது, அதுவும் நிறைய தண்ணீர் குடிப்பது இன்னும் நல்லது, ஆனால் சுடு நீரை குடிப்பதால் அதை விட அதிகமான நன்மைகள் கிடைக்கும் என்றும் நம்மில் பலருக்கும் தெரியாது. குளிர் காலமானாலும் சரி கோடை காலமானாலும் சரி தினமும் காலையில் எழுந்து ஒரு டம்ளர் வெந்நீரை குடித்து வாருங்கள். அது ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். இப்போது வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைப் பார்ப்போம்.



கடும் குளிர்காலத்தில் நம்முடைய மூக்கிற்கும், தொண்டைக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரக்கூடும். மூக்கு அடைபடும், தொண்டை கட்டும், இந்த சமயத்தில் இதமான சுடுநீரில் குளித்தால் பிரச்சினைகள் உடனடியாக சரியாகும். வெந்நீர் குடித்தவுடன் நம் உடலின் வெப்பநிலை உயர்கிறது, அது உடனடியாக வியர்வை உடம்பை விட்டு வெளியேறுகிறது, இதனால் உடலிலுள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமாகிறது. வெந்நீருடன் சற்று எழுமிச்சை சாற்றை சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.

டீன் ஏஜ் பருவத்தில் உள்ள பெரும்பாலான பெண்களுக்கும் சில ஆண்களுக்கு முகத்தில் ஏகப்பட்ட பருக்கள் இருக்கும், எண்ணை மற்றும் தூசிகள் படிவதால் தான் பெரும்பாலும் பருக்கள் உருவாகின்றன. பருக்கள் அகல தொடர்ந்து வெந்நீரை குடித்து வாருங்கள். பருக்கள் அகலும் முகமும் பொலிவான தோற்றத்தை பெறும்.



அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன் முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி மேலும் முடிகள் வளர வழிவகுக்கும். நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் அது பலவிதமான உடல் நலக்குறைவை ஏற்படுத்தும். ஆனால் வெந்நீரை தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீராகும் மேலும் நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகளும் கரைந்துவிடும்.

ரத்த ஓட்டத்தைப் போலவே குடலியக்கம் சரியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும், மலச்சிக்கலும் நீர்ச்சத்து குறையும் குடலியக்கத்திற்கு முக்கியமான எதிரிகள், மிதமான சுடு நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடலியக்கம் அதிகரிக்கும். இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பது என்பது பெரும்பாலனவர்களுக்கு சர்வ சாதரணமாக ஏற்படும் ஒரு குறையாகும். தேவையில்லாமல் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை குறைத்தாலே எடை குறைந்துவிடும்.



அதற்கு தினமும் காலையில் மிதமான சுடு நீரை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொழுப்பு குறைவதுடன் எடையும் குறையும். ஒரு சொட்டு எலுமிச்சை சாற்றை சுடு நீருடன் சேர்த்து கொண்டால் அது உடம்பில் மேலும் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும். பெண்கள் மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெரிதும் அவதிப்படுவார்கள், அந்த சமயங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.

இந்த காலத்தில் சிலருக்கு வேகமாகவே வயதாகிவிடும், தேவையில்லாமல் இருக்கும் நச்சுப் பொருட்கள் தான் இதற்கு காரணம் அத்தகைய நச்சுப் பொருள்கள் விரைவில் வெளியேறிவிடும். இதனால் இளவயதிலேயே வயதான தோற்றத்தை பெறுவது குறையும்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்எங்களின்
 கருத்துகளில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக