மூலிகையின் பெயர்: கண்டங்கத்திரி
மருத்துவப்
பயன்கள்:
- கண்டங்கத்திரி இரத்த அழுத்தத்தினை சீர் செய்ய உதவுகிறது.
- ஆஸ்துமாவிற்கு இச்செடியினைப் பொடித்து உண்ணுவது பழக்கத்தில் உள்ளது.
- காரணமில்லாத வறட்டு இருமலுக்கும் இது நல்லதொரு மருந்து.
- கீல் வாதம், மார்சளி, வியர்வை நாற்றம் ஆகியவற்றிக்கு நல்ல மருந்து.
பயன்படுத்தும் முறைகள்:
- வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 2 சிட்டிகை, கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் குடிக்க சீதளக்காய்ச்சல், சளிக்காய்ச்சல், நுரையீரல் பற்றிய எந்த சுரமும் தீரும்.
- சமூலம் 1 பிடி, ஆடாதொடை 1 பிடி, விஷ்ணுகாந்தி, பற்படாகம் இரண்டும் 1 பிடி சீரகம், சுக்கு வகைக்கு 10 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரைலிட்டராக்கி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் சாப்பிட புளு சுரம், நிமோனியா சுரம், மண்டை நீர் ஏற்றக் காய்ச்சல் முதலியன தீரும்.
- (கண்டங்கத்திரி குடிநீர்) கண்டங்கத்திரி வேர், ஆடாதொடை வேர் வகைக்கு 40 கிராம் அரிசிதிப்பிலி 5 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக்கி 100 மி.லி.வீதம் தினம் 4 வேளைக் குடிக்க இரைப்பிருமல் ( ஆஸ்துமா ), இருமல், கப இருமல், பீனிசம் தீரும்.
- பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப் பிடிக்க பல் வலி, பல் அரணைத் தீரும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக