தேவையானவை:
·
கத்தரிக்காய் – 2
·
உருளைக்கிழங்கு – 2
·
வெங்காயம் – 1
·
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
·
கருவேப்பிலை அலங்கரிக்க
·
அரைக்க
·
தேங்காய் – கால் மூடி
·
சோம்பு – 1 தேக்கரண்டி
·
மிளகு – 1 தேக்கரண்டி
·
சீரகம் – 1 தேக்கரண்டி
எப்படி
செய்வது?
வெங்காயம்,
தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டவும். ஒரு அடிகனமான
கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வதங்கிய பின் தக்காளியைப்
போட்டு, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். பின் வெட்டிய காய்கறிகளைப்
போட்டு வதக்கவும். மிதமாக வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு வதக்கி,
சிறிதளவு தண்ணீர் சேர்த்து காய்களை வேக விடவும். காய்கள் வெந்து எண்ணெய் மிதந்து
வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி கருவேப்பிலை தூவி உண்ணலாம். டிபனுக்கு
தொட்டுக்கொள்ள நல்லதொரு ருசியான தொக்கு இது!
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக