அன் கண்டிசனல் லவ், அன்கண்டிசனல் கேர் இதுவும் கூட செலிபிரட்டி வொர்சிப் சிண்ட்ரோம் மாதிரி மனசிக்கல் தான். தெளிவான மனநிலையில் இருப்பவர்கள் பிரதிபலிக்கப்படாத, உள்வாங்கி உணரபடாத செயலை தொடர்ந்து செய்யமாட்டார்கள். நாம் தேவைபடாத இடத்தில் அதை உணர்ந்தும் நின்றுக்கொண்டுயிருப்பதே நம்மை நாமே அவமானபடுத்தும் செயல் தான்.
பொருளாதாரம்
சார்ந்து ஹோகெல் சொன்ன தத்துவம் என்ன சொல்லுதுன்னா வினை - எதிர்வினை = விளைவு. இதை
முதலாளி, தொழிலாளி உறவு, கணவன், மனைவி அல்லது காதலன், காதலி என்று எல்லா
உறவுகளுக்கும் பொருத்தி பார்க்கலாம். மனிதனின் ஒவ்வொரு செயலுக்கு பின்னால் ஒரு
காரணமோ அல்லது தேடலோ இருக்கும்.
ஒரு
செயலுக்கு மனிதன் மூன்று விதமான எதிர்வினைகள் காட்டுவான். விருப்பு, வெறுப்பு
மற்றும் பயம் அல்லது குழப்பம். இந்த பயம் என்னான்னா இதை செய்யலாமா வேண்டாமா?
ரிஸ்க் எடுக்கலாமா இல்ல சும்மாவே இருந்துறலாமா ரகம். பெரும்பாலும் ஆண்கள் காதலை
பெண்கள் நிராகரிக்கக்காரணம் இந்த ரிஸ்க் மேனேஜ்மெண்ட் தான். உங்களை பிடித்தாலும்
முன் தந்த அனுபவம் மீண்டும் ரிஸ்க் எடுக்க விடாது
விருப்பு,
வெறுப்பு ரெண்டுமே ஒன்றுகொன்று தொடர்புடையது. இப்ப அதிமுக கட்சியை எடுத்துக்கோங்க.
அந்த கட்சியின் ஒரே ஆளுமை ஜெயலலிதா இறந்துட்டாங்க. அவங்க நல்லவங்களோ, கெட்டவங்களோ
அந்த கட்சியின் முக்கியமான ஆளுமை என்பதில் மாற்றுகருத்தில்லை. இப்ப கட்சியே வேறு
ஒரு கட்சியின் பயமுறுத்தலுக்கு அடிபணிந்து கிடந்தாலும் இன்றும் பலர் தம்மை அதிமுக
கட்சியை சேர்ந்தவன்னு சொல்றதை பார்க்கலாம். அதுக்கு காரணம் அதிமுக மேல் இருக்கும்
விருப்பம் இல்லை. திமுக மேல் இருக்கும் வெறுப்பு
எல்லா செயலுக்கு பின்னாலும் நாம் கடந்துவந்த
அனுபவங்களின் தாக்கம் இருக்கும். காதலை நிராகரிக்கும் பெண்ணை இன்ப்ரெஸ் பண்றேன்னு
கோமாளிதனம் பண்ணுவது அவர்களை டார்ச்சர் பண்ற மாதிரி ஆகிரும். அவர்கள் போக்கில்
விடுவது அவர்களுக்கு சிந்திக்க வாய்ப்பளிக்கும்
நம் வாழ்க்கை என்பதே அனுபவங்களின்
கட்டுமானமும், மீண்டும் மீண்டுமான பரிசோதனை முயற்சியும் தான். அது இரண்டும் நம்
இருத்தலை இந்த உலகுக்கு காட்டுகிறது. இருத்தலே வாழ்க்கையாக இருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக