Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 7 மார்ச், 2019

இந்த கேள்விக்கு விடை தெரியுமா ?

' கடவுள் என்று ஒருவர் நிஜமாகவே இருக்கிறாரா ?  '

இந்த கேள்விக்கு விடை தெரியுமா உங்களுக்கு ? ஆம் என்றோ இல்லை என்றோ எவ்வாறு நிரூபிப்பீர்கள் ? கீழே உள்ள கதையை படியுங்கள் !

GOD IS NOW HERE
 ஒரு ரயில் பயணத்தில் பைபிள் படித்து கொண்டு இருந்த ஒருவரை , சக பயணியான ஒரு விஞ்ஞானி சதா பேச்சு கொடுத்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்.“அறிவியல் இத்தனை வளர்ச்சி அடைந்த பிறகும்நீங்கள் இன்னும் இந்த பைபிள்,மதம்கடவுள் போன்ற பழங்கால மரபு சார்ந்த விடையங்களை நம்பி கொண்டு இருக்கின்றீர்களாஇன்றும் உங்களை போன்ற மனிதர்களை பார்ப்பதற்கு எனக்கு ஆச்சரியமாக உள்ளது” என்று கேலியாக பேசிய விஞ்ஞானி, தன்னுடைய முகவரி அட்டையை பைபிள் படித்து கொண்டு இருந்தவரிடம் கொடுத்தார். “தாங்கள் விரும்பினால், முன் அனுமதி பெற்று ஒரு முறை என்னை வந்து சந்தியுங்கள். வாழ்க்கை என்ன? அதை எவ்வாறு அறிவு பூர்வமாக அணுக வேண்டும் என்பதை உங்களுக்கு அறிவியல் ரீதியாக புரிய படுத்துகிறேன்” என்றார். அவரும் அமைதியாக விஞ்ஞானி கொடுத்த அட்டையை வாங்கி தன் பைபிளில் வைத்து கொண்டார்.

ரயில் பயண முடிவில் இறங்க தயாரான விஞ்ஞானி, "ஆமாம், நீங்கள் உங்களை பற்றி எதுவும் சொல்ல வில்லையேஉங்கள் பெயர் ?” என்று விசாரித்தார். பைபிள் படித்து கொண்டு இருந்தவர், “என் பெயர் தாமஸ் ஆல்வா எடிசன்” என்று பணிவாக உரைத்தார்.

தன் சக பயணியானவர், அனைத்து கண்டுபிடிப்புகளின் தந்தை ( Who is considered as the father of all inventions ) என்று அறியப்பட்ட மேன்மை பொருந்திய விஞ்ஞானி, தாமஸ் ஆல்வா எடிசன் என்பதை கேட்டு திடுக்கிட்ட விஞ்ஞானி“ ஐயா, உங்களை வந்து சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்கி தாருங்கள்” என்று கேட்டுக் கொள்ள, எடிசனும் செவ்வாய் கிழமை வந்து என்னை பாருங்கள் என்று சொல்லி விட்டு கிளம்பினார்

குறிப்பிட்ட நாளன்று தாமஸ் ஆல்வா எடிசனின் அறிவியல் ஆராய்ச்சி கூடத்திற்கு சென்ற விஞ்ஞானி, அங்கு வைக்க பட்டு இருந்த சூரிய குடும்பத்தின் மாதிரியை (Model of Solar System ) கண்டு வியந்து“இதை செய்தது யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா ?” என்று கேட்டார். ( இந்த சூரிய குடும்ப மாதிரி எந்திரம், இன்றும் எடிசனின் பொருட்காட்சியில் பாதுகாப்பாக பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது )

புன்னகை பூத்த எடிசன், "அதை யாரும் செய்யவில்லைநேற்று இரவு அது இங்கு இல்லைஇன்று காலை தான் திடீர் என்று வந்தது” என்றார்

மேலும் ஆவல் அடைந்த விஞ்ஞானி, “ சார்நான் உண்மையாகவே கேட்கிறேன்,இதை வடிவமைத்தது யார் ?” என்றார்.

எடிசன் மீண்டும், "நானும் உண்மையாக தான் சொல்கிறேன்நான் காலை வந்த போது திடீர் என்று இது இருந்தது” என்றார். பொறுமை இழந்த விஞ்ஞானி, “சார், யாரும் உருவாக்காமல் திடீர் என்று ஒன்று தானாக உருவாவது சாத்தியமில்லை என்பது நம் இருவருக்கும் நன்றாகவே தெரியும் “என்று சற்றே சினத்துடன் கூறினார்.

எடிசன் இப்போது அமைதியாக, “ உங்களை போன்ற ஆராய்ச்சியாளர்கள் அனைவரும், இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமே தானாக தான் உருவானது என்று நம்பும் போது, ஒரு சிறிய கருவி தானாக உருவாவதும் சாத்தியம் தானே ?” என்று பொட்டில் அடித்தாற்போல் கேட்டார்.

"விளைவு என்று ஒன்று இருந்தால்காரணம் என்று ஒன்று இருந்தே ஆக வேண்டும்". அதாவது, இந்த உலகில் எந்த ஒரு காரியம் நடந்தாலும் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் உண்டு. அந்த காரணத்திற்கு கர்த்தாவும் உண்டு.

படைப்பு என்று ஒன்று இருந்தால்படைத்தவன் என்று ஒருவன் இருந்தே ஆக வேண்டும் என்கிற உண்மையை இவ்வாறு உணர்த்தினார் எடிசன்.  ரிக் வேதததில் சொல்வதை போல, "We don't know what it is.. But we know it is."

நீதி : 
நம்மை சுற்றி படைப்புகள் இருக்கும் போது படைத்தவன் இருந்தே ஆக வேண்டும் என்பது உண்மை தானே !



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக